ஓர் வரலாற்று நிகழ்வு...


வெளிநாட்டில் தமிழர்கள் வாழும் பகுதியில் அவருக்கு பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. நிகழ்ச்சி நடைபெற இருந்த பகுதிக்கு முன்னதாகவே அவர் வந்து விட்டார்...
அவரை அடையாளம் தெரியாத அங்கு இருந்தவர்கள் விழா நிகழ்ச்சிக்கு உதவி செய்ய வந்தவர் என நினைத்தனர்... விருந்து தயாரிக்கும் இடத்திற்கு அழைத்து சென்று காய்கறி வெட்டவும் பணித்தனர்...அவரும் இன்முகத்துடன் அந்த வேலையை செய்யலானார்...
விழா தொடங்கும் நேரத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் அவரை தேட
தொடங்கினர்...சமையல் பணியில் இருந்தவர்தான் அவர் என அறிந்து பதற்றமுடன் அழைத்து வந்தனர்...அவரும் எந்த வித சலனமும் அடையாமல் இயல்பாக நிகழ்வில் கலந்து கொண்டார்....

அவர் காந்தி...

இத்தனைக்கும்,அவர் மகாத்மா என்றோ காந்தியடிகள் என்றோ அப்போது அழைக்க படவில்லை...ஒரு மனிதன் தன் பணம் சொத்து பதவி பட்டங்கள் இவைகளில் இருந்து தள்ளி நிற்க பழகிவிட்டால் அவன் மகாத்மா ஆகின்றார்...

வாங்க...நாமும் நம்மாலான முயற்சிகள் செய்வோம்...

Powered by Blogger.