சாயி புத்ரன் பதில்கள்

அன்புக்கும் பாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ஆர். மதனகோபால், திருச்சூர்

சாயி புத்ரன் பதில்கள்
தாய் நம் மீது காட்டுவது பாசம், தாரம் நம் மேல் வைப்பது அன்பு.

கனவு நனவாக என்ன செய்ய வேண்டும்? பக்தி பூரணமடைய என்ன செய்யவேண்டும்?
எல். ஐஸ்வர்யா, சென்னை-5

சாயி புத்ரன் பதில்கள்
கனவு நனவாக  வேண்டுமானால் கடின உழைப்பு என்ற வழியில் நாம் பயணம் செய்யவேண்டும். பக்தி பூரணமாக வேண்டும் என்றால் இன்பம் துன்பம் என்ற இரண்டு வழிகளிலும் பயணிக்க வேண்டும். இலக்கை அடையும் வரை எந்த நிலையிலும் சோர்ந்துவிடவோ, போதும் என்று ஓய்ந்துவிடவோ கூடாது.

Powered by Blogger.