Monday, June 20, 2016

சாயிபுத்ரன் பதில்கள்





நரகலோகம் எப்படியிருக்கும்?
பி. தேவகி, வந்தவாசி
சாயிபுத்ரன் பதில்;
அதிகமாகப் பெண்ணைப் பெற்றவனிடத்திலும், மிகுந்த வறுமையிலும் கடன் தொல்லையிலும் வாழ்ந்துகொண்டிருப்பவனிடத்திலும், எப்போதும் கோபமுள்ள கணவனிடம் வாழும் மனைவியிடத்திலும், அடிக்கடி கோபப்படும் மனைவி உடையவனிடத்திலும், இழிந்த குணம் உடையவனிடத்தில் வேலை பார்க்கிறவனிடத்திலும், எந்த வசதியும் இல்லாத சிறிய ஊரில் குடியிருக்கிறவனிடத்திலும் இந்தக் கேள்வியைக் கேட்டால் உடனடியாகப்பதில் கிடைக்கும்.


நீங்கள் சிலரை ஜோதிடரிடம் அனுப்பி விடுகிறீர்களாமே, அது ஏன் சாயிராம்?
எஸ்.ஸ்ரீதர், கோயம்பேடு, சென்னை
சாயிபுத்ரன் பதில்;
நான் நடத்துவது கூட்டுப்பிரார்த்தனை. இங்கே நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே வேண்டுதல் செய்யப்படுகிறது. நம்பிக்கை இல்லாமல் அருள்வாக்கு கேட்க வருவோர், சஞ்சல புத்தி யுள்ளோர் ஆகியோருக்கு என்னிடம் வேலையில்லை. தமக்குள் ஒற்றுமையில்லாதவர்களால் மத்தியஸ்தம் செய்கிறவருக்கு லாபம், சஞ்சல புத்தியுள்ளவர்களால் ஜோதிடர்களுக்கு லாபம், சபலம் உள்ளவர்களால் பெண்களுக்கு லாபம், நோயாளியால் மருத்துவருக்கு லாபம், எச்சரிக்கை இல்லாதவர்களால் திருடர்களுக்கு லாபம் என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட நபர்கள் பிரார்த்தனைக்கு வந்து எதையும் பெறப் போவதில்லை. இவர்களிடமிருந்து பிறர் எதையாவது பெற்றுக்கொண்டு போகட்டும் என அனுப்பிவிடுகிறேன்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...