இரண்டு வயதில் ஓர் ஆண், ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையுடன் நல்லபடியாகப்போய்க்
கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென என் தந்தையார் காலமானார். அவரது தலை திவசத்திற்கு தாய் வீட்டிற்கு அழைத்துவந்த என் கணவர், தனக்கென ஒரு வேலை பார்த்து,
வீடு பார்த்துவிட்டு வருவதாகப்
போனார். போனவர் போனவர்தான் திரும்ப வரவேயில்லை.
கணவனால் கைவிடப்பட்ட என்னையும் என் குழந்தைகளையும், அம்மா, எனது தம்பி, தம்பி மனைவி என எல்லோரையும் எனது அக்காதான் இன்றுவரை காப்பாற்றிவருகிறார்.
இதற்காகவே அவர் திருமணம் செய்து
கொள்ளவில்லை. இப்போது எனது மகள் எம்.சி.ஏ.
மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். மகன்
பி.ஈ இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.
நாங்கள் பாபாவை நம்பி வணங்கி எங்கள் வாழ்க்கையை நகர்த்திவருகிறோம்.
இந்த நிலை ஏற்பட பாபாவே காரணம்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுக்கு கல்வித்தொகை இல்லாமல் மிகவும்
கஷ்டப்பட்டேன். கல்லூரி திறக்க இன்னும் சில வாரங்களே இருந்த நிலையில் விரதமிருந்தால்
எனது வேண்டுதல் கேட்கப்படும்
என்ற நம்பிக்கையில் விரதத்தை ஆரம்பித்தேன்.
ஆறு வாரம் முடிந்தபோது, என் தம்பி ஒரு நாள் ஒரு கட்டு பணத்துடன் வந்தான்.
அதை பாபா திருவடிகளில் வைத்து
வணங்கினான். பணம் ஏது எனக் கேட்டபோது, நண்பர் ஒருவர் தந்தனுப்பியதாகவும் பிறகு வந்து வாங்கிக் கொள்வதாகச்சொன்னதாகவும்
கூறினான். இந்த நிலையில் மகளுக்கு கவுன்சிலிங்கில் சீட்டு கிடைத்தது.
எனது தம்பி, தனது நண்பரிடம் விஷயத்தைச்சொல்லி மூன்று மாதத்தில் திரும்பத் தருவதாகக்கூறி பணத்தைப்
பெற்று கல்லூரியில் சேர்த்தோம். மகளுக்கு ஆறு மாதத்திற்கு மேல் அவ்வப்போது தொடர்ச்சியாக மாதாந்திரப் பிரச்சனையால் பாதிப்புக்கு ஆளானாள். மாத்திரைகளை சாப்பிட்டு உடல் பருமன் ஏற்பட்டு
அது வேறு அவதியானதே தவிர,
நோய் குணமாகவில்லை.
என் மகளிடம், “பாபாவிடம் மானசீகமாக வேண்டு, நிச்சயம் உனது நோயை குணப்படுத்துவார்” எனக் கூறினேன். அவளும் வேண்டினாள், மனம் உருகி வேண்டிய அன்றே அவளது நோய் குணமானது. தீராத தலைவலியால் அவதிப்பட்டு
வந்தேன்.
பாபாவின் உதியை தண்ணீரில் கலந்து குடித்து குணமானேன். தினமும் மூச்சுவிட
சிரமமாக இருந்தது, இந்தப் பிரச்சினை தீரவும் பாபாவின் உதியைத்தான் உள்ளுக்கு சாப்பிடும்
மருந்தாகப்பயன் படுத்தி குணம் பெற்றேன். இப்படி நிறைய அற்புதங்களை அவரது அருளால் அனுபவித்து அவருக்கு ஒரு உண்மையான சாட்சியாக வாழ்ந்து வருகிறேன். எங்களைத் தொடர்ந்து காப்பாற்ற
வேண்டியது அவர் பொறுப்பு என அவரது
பாதங்களையே சரணடைகிறேன்.
திருமதி. மலர், அண்ணாநகர்
No comments:
Post a Comment