Friday, June 24, 2016

பாபாவே உதியைத் தருகிறார்

சுந்தரமான அழகு படைத்த சாயி, மசூதியின் விளிம்பில் நின்றுகொண்டு உதியை ஒவ்வொரு பக்தருக்கும், அவரவர் நன்மையைக்கருத்தில் கொண்டு விநியோகித்துக்கொண்டிருக்கிறார்.                                              (அத்10)

என்னிடம் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டி வருகிற பக்தர்களுக்கு உதியைக் கொடுத்து தண்ணீரில் சிறிதளவு சேர்த்து அருந்துமாறு கூறுவேன். உதியே பாபா, அதுதான் நமது நம்பிக்கை. இந்த நம்பிக்கையோடு யார் அதை உள்ளுக்கு அருந்துகிறார்களோ அவர்களது பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
நான் மட்டுமல்ல, சாயி அடியார்கள் பலரும் இந்த உதியைத்தான் தன்னைத் தேடிவரும் பக்தர்களுக்கு அளிக்கிறார்கள். பாபாவின் உதியை நம்பிக்கையோடு பெறுபவர்களுக்கு நன்மையை நடப்பதை கவனித்து, தங்களிடம் உதி பெற்றதால் நடந்தது என சிலர் நினைக்கிறார்கள்; இவரிடம் உதி பெற்றதால் இது சரியானது என பயன் பெற்றவர்கள் நினைக்கிறார்கள்.
இந்த இரண்டுமே தவறானது. யார் தந்தாலும் பாபாவின் உதி அற்புதமாக வேலை செய்யும். நாமாக எடுத்துப் பயன்படுத்தினாலும் அது தன் வேலையைத் தவறாமல் செய்யும். என சத்சரித்திரம் அழகாகச் சொல்கிறது.
அவர்  மசூதியின் விளம்பில் நின்றுகொண்டு உதியை   விநியோகித்தார் என கடந்த காலத்தைய நிகழ்வாகச் சொல்லாமல், விநியோகிக்கிறார் என்று கூறுவதால் பாபாதான் அந்த உதியை இன்னமும் தருகிறார் என்பது தெளிவாகிறது.
சீரடியில் பாபா என்றும் மசூதியின் விளிம்பில் நின்றுகொண்டு உதி தந்ததில்லை; தரமாட்டார்.
இதற்கு என்ன பொருள்?
தனது பக்தனுக்கு இந்த நன்மை நடக்க வேண்டியிருப்பதால் உடனடியாக அவனுக்கு உதவி செய்துவிட வேண்டும் என நினைத்து, யாரோ ஒருவர் மூலமாகத் தருகிறார். இந்த யாரோ ஒருவர்தான் மசூதி. அவரது மனதில் உந்து சக்தியை ஏற்படுத்துகிறார் அல்லவா? அதுதான் மசூதியின் விளிம்பில் நிற்பது.
அவரவர் நன்மையைக் கருத்தில் கொண்டுஎன்று சொல்லப்படுவதால், தனித்தனியாக ஒவ்வொரு பக்தரின் நலனையும் அவர் கவனித்து செயல்படுகிறார் என்பதையும், தன்னை நம்பி வருகிற பக்தரின் நன்மையை தனது மனதில் நினைத்திருக்கிறார் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த உதியின் பிரபாவம் பற்றி பிறர் சொல்ல தேவையில்லை. பாபாவே அதை நேரடியாக விநியோகம் செய்கிறார்.
ஒருமுறை தேவ் என்கிற பக்தர் ஞானேஸ்வரி புத்தகத்தை பாராயணம் பண்ண விரும்பினார். பாபாவிடம் கொடுத்து வாங்கினால் சுலபத்தில் படிக்க முடியும் என நினைத்து புத்தத்தின் மேல் ஒரு ரூபாயை வைத்து பாபாவிடம் நீட்டினார். பாபா இருபது ரூபாய் கேட்டாரே தவிர, எந்த புத்தகத்தையும் வைத்துக்கொள்ள கூறவில்லை.
மறுபடி தேவ் வந்தபோது இருபது ரூபாய் வாங்கினார். மறுபடி அவரிடம் இருபத்தைந்து ரூபாயை வாங்கினார். இப்போதும் அவருக்கு பாராயணம் செய்ய அனுமதியில்லை.
பாபாவிடம் ஆன்மீக அனுபவம் பெற்ற பாலக்ராம் மான்கரிடம் பாபாவின் அற்புதங்கள் பற்றி கேள்வி கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தார். தேவ் இன்னொரு பன்னிரண்டு ரூபாய் தரவேண்டியதாயிற்று. இவ்வளவும் வாங்கிக்கொண்டு, எதற்காக என் கந்தல் துணியைத்திருடினாய் என தேவிடம் சண்டைபோட்டார் பாபா.
தேவ் எதையும் திருடவில்லையாதலால் அப்பேச்சு அவருக்குப் புரியவில்லை. தன்னைப் பற்றியும் தனது அற்புதத்தைப் பற்றியும் பிறரிடம் கேட்பது தவறானது. அதுதான் கந்தலைத் திருடுவது. அனுபவத்தை நேரில் உணரவேண்டும் என்கிறார் பாபா.
உதி விஷயத்திலும் இப்படித்தான். அதன் மகிமையை யாரும் சொல்லாமல் நாமே நமது சொந்தஅனுபவத்தின் மூலம் அறியலாம்.
பாபா தேகத்தில் இருந்தபோது எத்தகைய பேரானந்த அனுபவம் ஏற்பட்டதோ அதே வகை அனுபவத்தை இப்போதும் நம்மால் உணர முடியும் என்கிறார் பாபா. சோதித்துப் பார்த்து அற்புதத்தை அனுபவித்தால் நன்மைதான்!
உதியை யாரிடமிருந்து பெற்றாலும் அதை பாபா தருகிறார் என்பதை உறுதியாகத்தெரிந்துகொள்ளுங்கள், நன்மை நடக்கும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...