கீரப்பாக்கம் பாபா ஆலயம்

2017 அக்டோபரில் கீரப்பாக்கம் பாபா ஆலயக் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், கோயில் திருப்பணிகள் வேகமாக நடைபெறத்துவங்கியுள்ளன.


பக்தர்கள் ஆலயத்திருப்பணிகளுக்கு உதவி செய்ய நினைத்தால் ஆலயப்பணிகளை நேரில் பார்வையிட்ட பிறகு கூட உதவலாம்.

பக்தர்கள் அவர்களது விருப்பத்திற்க்கு ஏற்றவாறு ஏதேனும் ஒரு கைங்கர்யத்தை எடுத்து செய்யலாம், பொருட்களாகவும் அளிக்கலாம்.

ஸ்ரீ சாய் மிஷன் ஆலய கட்டுமான பணிகளைச் செய்வதால், நேரில் வர இயலாதவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கில் தங்களது கைங்கர்யத்தை செலுத்திட கேட்டுக்கொள்கிறோம்.

SRI SAI MISSION (REGD), BANDHAN BANK, TAMBARAM BRANCH, CURRENT ACCOUNT No.10170001962463 IFSC CODE: BDBL 0001613.

காசோலை மற்றும் பணவிடை மூலம் கைங்கர்யத்தை அனுப்புவோர் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.

SRI SAI MISSION (REGD), 3E/A, 2ND STREET, BUDDHAR NAGAR, NEW PERUNGALATHUR, CHENNAI - 600063.

மேலதிகத்தகவல்கட்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்

98412 03311 மற்றும் 90940 33288

Tuesday, June 7, 2016

ஸ்ரீசாயி சாலீஸா வழிபாடு

ஷீர்டி வாஸா ஸாயிப்பிரபோ நீயே ஜகத்தின் பாதுகாப்பாளர்
தத்த திகம்பர அவதாரம் உன்னில் சிருஷ்டி விவகாரம்
த்ரிமூர்த்திரூபா ஓ ஸாயி கருணையோடு காப்பாய் ஓ ஸாயி
தரிசனம் கொடுக்க வாருங்கள் முக்திக்கு மார்க்கள் காட்டுங்கள்  (ஷீர்டி)

கந்தலாடையே (கப்னி) பொன்னாடையாய் ஜோல்னா பையே தோளின் அணிகலனாய்
வேப்பமரத்தினடியில் தோன்றி பக்கிரி ரூபத்தில் வலம் வந்தாய்
கலியுகத்தில் நீ அவதரித்தாய் பொறுமை தியாகம் கற்றுக் கொடுத்தாய்
ஷீர்டி கிராமம் உன்வாசம் பக்தர்கள் மத்தியில் உன் ரூபம்
சாந்த் பட்டீல் ஆழ்ந்தார் கவலையிலே குதிரையை இருமாதம் காணவில்லையே
ஸாயி நீ அவனுக்கு இரங்கினாய் தொலைந்த குதிரையை மீட்டுத் தந்தாய்  (ஷீர்டி)

எண்ணைக்கு பதிலாய் நீரூற்றியுமே ஒளி கொடுத்தாய் நீ ஜோதிக்குமே
அதனைக் கண்டவர் மெய் மறந்தனரே கேட்டவர் வியப்பு மாளவில்லையே
தாத்யாவின் உயிர் ஊசலாடியதும் தந்தாயே நீ உன் ஆயுளையும்
தாய் பாய்ஜா செய்த சேவையினால் தாத்யா உயிரை காத்தாயே!  (ஷீர்டி)

பசு, பட்சிகளிடம் இரக்கம் கொண்டாய் அன்பாலேயே எமக்கு அரசனானாய்
எல்லோர்பாலும் உன் அருள் நோக்கு பக்தனுக்களித்தாய் அமுத வாக்கு
உன் வாயில் படியில் நின்றேனே உன்னையே என்றும் துதித்தேனே
அபயம் தந்து காப்பாற்று ஸாயி கருணை காட்டு ஷீர்டி ஸாயி  (ஷீர்டி)

உன்னுடைய அருளால் துவாரகாமாயி பாக்கியமடைந்ததே ஓ ஸாயி
உன் துனியின் ஜ்வாலை பட்டதுமே பாவம் போனது சட்டெனவே
பிரளய மழையை சொல்லால் தடுத்து பக்தர்களைக் காப்பாற்றினாய்
கோதுமையை அரைத்தாய் அரவையிலே அரவையில் காலராவும் அரைந்ததே (ஷீர்டி)

மூலே சாஸ்திரி என்ற அந்தண ஸ்வாமிக்கு உனது லீலைகளைக் காட்டினாயே
விஷப்பாம்பு ஷாமாவை தீண்டியுமே விஷமிறக்கி அருளினாய் ஜீவனுமே
பக்த பீமாஜிக்கு க்ஷயரோகம் பொறுமை இழந்தான் பீமாஜி
உதி வைத்தியம் செய்தாய் வியாதியை மாயம் செய்தாய்
காகாஜி கண்டார் உன் திவ்ய ரூபம் அவருக்கு அளித்தாய் நீ விட்டல் ரூபம்
தாமுவிற்கு அளித்தாய் சந்தானம் அவர் மனம் பெற்றதே சந்தோஷம் (ஷீர்டி)

கருணாமூர்த்தி கருணை காட்டு எங்கள் மீது இரக்கம் காட்டு
அனைத்தும் உனக்கே அர்ப்பணமே எங்கள் பக்தி பெருகட்டுமே
மேகாவும் உன்னை அறியாமலே முஸ்லீம் என பேதம் கொண்டானே
உன்னில் காட்டினாய் சிவனையுமே மேகாவும் அடைந்தான் பரமபதமே  (ஷீர்டி)

மருத்துவருக்கு அளித்தாய் ஸ்ரீ ராம ரூபம் பல்வந்தருக்கு அளித்தாய் ஸ்ரீ தத்த ரூபம்
நிமோன்கருக்கு அளித்தாய் மாருதி ரூபம் சிதம்பரத்திற்கு அளித்தாய் கணபதி ரூபம்
மார்த்தாண்டருக்கு அளித்தாய் கண்டோபா கணூக்கு சத்யதேவனாக
நரஸிம்ம ஸ்வாமியாய் ஜோசிக்கு தரிசனம் தந்தாய் ஸ்ரீ ஸாயி  (ஷீர்டி)

இரவும் பகலும் உன் தியானம் நித்யம் உன் லீலாபடனம்
பக்தியோடு செய் த்யானம் கிடைக்கும் முக்தி மார்க்கம்
உன் பதினொன்று வாக்குகள் பாபா அது எங்களுக்கு வேதங்கள்
சரணம் என்று வந்த பக்தர்களை கருணை காட்டி நீ காப்பாற்றினாய்  (ஷீர்டி)

எல்லாவற்றிலும் உன் ரூபம் உன் மகிமை அதிக சக்தி மயம்
ஓ ஸாயி நாங்கள் அஞ்ஞானிகள் தாருமய்யா எங்களுக்கு ஞானத்தையே
சிருஷ்டிக்கு நீயே மூலம் ஸாயி நாங்கள் உன் சேவகர்கள்
ஸாயி நாம் ஜெபித்துமே நித்யம் ஸாயியை பிரார்த்திப்போம்  (ஷீர்டி)

பக்தியை அறிந்து ஸாயியை மனதில் நினைத்துக் கொண்டு
மனதோடு ஸாயி த்யானம் அனுதினமும் செய்ய வேண்டும்
பாபா எரித்த உதி நிவாரணம் தரும் அனைத்து வியாதி
சமாதியிலிருந்து ஸ்ரீ ஸாயி பக்தர்களை காப்பாற்றுவார் ஸ்ரீ ஸாயி  (ஷீர்டி)

நம் கேள்விக்கு பதிலில் தருவார் ஸ்ரீ ஸாயி சரித்திரம்
கேளுங்கள் அல்லது படியுங்கள் ஸாயி சத்தியம் என்பதை உணருங்கள்
ஸத் சங்கமம் செய்யுங்கள் ஸாயி ஸ்வப்பனத்தில் தோன்றுவாரே
பாரபட்சத்தை விடுங்கள் ஸாயியே நமது ஸத்குரு  (ஷீர்டி)

வந்தனமய்யா பரமேசா ஆபத்பாந்தவா ஸாயீஸா
எங்கள் பாவங்களை கரையேற்றி மனதில் உள்ள கோரிக்கையை நிறைவேற்று
கருணாமூர்த்தி ஓ ஸாயி கருணையோடு எங்களை கரையேற்று
எங்கள் மனமே உன் ஆலயம் எங்கள் சொற்களே உனக்கு நைவேத்தியம்  (ஷீர்டி)

ஸ்ரீ ஸச்சிதானந்த ஸமர்த்த ஸத்குரு ஸ்ரீ ஸாயிநாத் மஹராஜ்கீ ஜய்!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்