Thursday, June 16, 2016

கடவுள்

நம்மைக் காக்கிற கடவுள் எப்படி நம்மை அழிப்பவர் ஆகமுடியும்? எதற்காக கடவுள் நல்லவரையும் கெட்டவரையும் அழிக்கிறார்?
கோமளவள்ளி, செங்கம்
சாயி புத்ரன் பதில்கள்
நிலத்தில் விதைகளை விதைத்து முளைத்தச்செடிகளுக்கு கண் விழித்து நீர்ப்பாய்ச்சி அவை வளரக் காரணமாக இருக்கிறோம்.
களையெடுத்து, காவல் காத்து கதிர்வந்ததும் மருந்து போடுகிறோம். அனைத்தும் முற்றியது, இப்போது என்ன செய்வோம்? நான் வளர்த்த பயிர்கள் விளைந்து நிற்கின்றன, பலன்கள் தெரிகின்றன, அவற்றை அப்படியே விட்டுவிடலாம் என நினைப்பீர்களா?
வளர்த்த பயிரை பலன் கருதி அறுவடை செய்வது போலத்தான் நம்மைப் படைத்துக் காத்த இறைவன் புண்ணிய பாவ பலன்களைக் கருதி நம்மை அறுவடை செய்து விடுகிறான்.
புண்ணியசாலிகள் யார்? பக்தி உடையவரா? நல்லனவற்றைச் செய்பவரா?
கே.வாசுதேவன், புலிப்பாக்கம்
சாயி புத்ரன் பதில்கள்
யாருடைய சுபாவம் பரிசுத்தமாக உள்ளதோ, சித்தம் சுத்தமடைந்து அதன் மூலம் அவர்கள் செயல்கள் சுயநலம் இல்லாமல் இருக்கிறதோ, யாருடைய நடத்தை பரிசுத்தமாக உள்ளதோ அவர்கள்தான் புண்ணியசாலிகள். மனம் சுத்தமில்லாமல் ஒரு செயலைப் பிறருக்காக செய்வதாலோ, நடத்தை சுத்தமின்றி ஒழுக்கத்தைப் பிறருக்குக்காட்டுவதாலோ புண்ணியம் வந்துவிடாது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...