Friday, June 24, 2016

சாயி புத்ரன் பதில்கள்


மற்றவர்களைப் போல என்னால் கோயில் குளம் போகமுடியவில்லை; அதே சமயம் பிறர் போல் புண்ணியமும் சம்பாதிக்கவேண்டும். இதற்கு வழி இருக்கிறதா?
சி. கற்பகம், தேவனூர்

சாயி புத்ரன் பதில்:
நிச்சயம் உண்டு. கொடுப்பவனின் பாவம் பெற்றுக்கொள்பவனை அடையும், பெற்றுக் கொள்பவனின் புண்ணியம் கொடுப்பவனை அடையும்.
நீங்கள் பிறருக்கு கொடுக்கிறவராக மாறினால் புண்ணியம் வந்துவிடும். கோயில் குளங்களுக்குப் போய் வருகிறார்கள் அல்லவா? அவர்களை அழைத்து அவர்கள் மனம் குளிர ஒருவேளை சாப்பாடு கொடுத்தால்போதும், அவர்கள் போய் சம்பாதித்த புண்ணியத்தில் கணிசமாக உட்கார்ந்த இடத்தில் உங்களுக்கு வந்துவிடும்.


என் நண்பர் மரியாதையை எதிர்பார்க்கிறார். அதுதான் உண்மையான நட்பா?
கா. ரேவதி, சிதம்பரம்

சாயி புத்ரன் பதில்:
நட்பு வளராதவரைதான் மரியாதை செய்ய வேண்டும். நட்பு வளர்ந்த பிறகு செய்யப்படும் மரியாதை அவமரியாதை. கபடமான மரியாதை. இதை செய்யக்கூடாது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...