திருவொற்றியூரை அடுத்த சத்தியமூர்த்தி நகரில் வசந்தா மருத்துவமனை வளாகத்தில் புதிதாக பாபா ஆலயம்
கட்டப்பட்டுள்ளது. பாபாவின் ஆணைப்படி இந்த
ஆலயத்தை டாக்டர் நந்திவர்மன் கட்டியுள்ளார்.
தன்வந்திரி சாயி பாபா என சாயி
வரதராஜனால் பெயர் சூட்டப்பட்ட இந்த பாபா
ஆலயத்திற்கு கடந்த மாதம் 19-ம் நாள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாயி தரிசனம் ஆசிரியர் ஸ்ரீ சாயி வரதராஜன், டாக்டர் செல்வபதி பாஸ்கரன், வேலூர் நடராஜன், எண்ணூர்ராமலிங்கம், வசந்தா உட்பட பல சாயி பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.
இந்த ஆலயத்தை தரிசிக்கவிரும்பும் பக்தர்கள் டாக்டர் பி. நந்திவர்மன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
வசந்தா நர்சிங்ஹோம், அன்னை கங்கம்மாள் நகர்,சத்தியமூர்த்தி நகர் அருகில், திருவொற்றியூர் போன்: 9382890750
No comments:
Post a Comment