Monday, June 13, 2016

பிராமண மசூதி

பிரம்ம சமாஜம் என்ற அமைப்பைச் சேர்ந்த காசிபாய் கனிட்கர் என்ற பெண்மணி சீரடிக்கு வரும் போது, பாபா மாய வேலை செய்யும் முகமதியரா அல்லது இந்து சித்தரா? என்று நினைத்துக் கொண்டு வந்தார். ஏற்கனவே அவர்கள் அமைப்பில் இதைப்பற்றி விவாதித்தார்கள்.
அந்த அம்மையார் பாபாவை நெருங்கியபோது, பாபா தனது நெஞ்சைக் காட்டி நான் ஒரு பிராமணன், தூய பிராமணன், எனக்கும் மாயமந்திர வேலைக்கும் தொடர்பு எதுவுமில்லை.
அது மாதிரியான சித்து வேலை செய்யும் எந்த முகமதியரும் இங்கு நுழையத் துணிய முடியாதுஎன்று கூறியதோடு, “இந்த பிராமணன் லட்சக்கணக்கான மக்களை தூய்மையான ஒளி நிறைந்த பாதைக்கு இழுத்து அவர்களின் லட்சியத்தை அடைய இட்டுச் செல்வார். இது பிராமண மசூதி, இங்கு மாய வேலை செய்யும் எந்த முகமதியனின் நிழல்படவும் அனுமதிக்கமாட்டேன்என்று கூறினார்.
(ஆதாரம் - ஸாயி லீலா 1934 தொகுப்பு: 2, பக்கம் 79)

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...