சரணாகதி என்பதை சுருக்கமாக ஆனால் புரியும் வகையில் கூறுங்கள்.
என். கார்த்திகேயன், மதுரை
சாயி
புத்ரன் பதில்கள்
பகவானிடம் வைக்கும் பூரண நம்பிக்கை சரணாகதி. பகவான் எப்படி
நடத்தினாலும் அனைத்தும் அவரால் நிகழ்கிறது என
ஏற்றுக் கொண்டு அவர் மீது பேரன்பு செலுத்தி
எப்போதும் மகிழ்ச்சியுடன்
இருக்கவேண்டும். அவரது நாமம் ஸ்வரூபம், குணங்கள், லீலை முதலியவற்றை இடைவிடாமல் கேட்பதும், கீர்த்தனம் செய்வதும்,
நம்பிக்கையுடனும்
பக்தியுடனும் பூஜிப்பதும், அவரை வணங்குவதும், எப்போதும் அவரை நினைப்பதும் அவர் மீதுள்ள
அன்பின் அடையாளங்கள் ஆகும். அவரே நமக்கு புகலிடம், அவரே நம் தலைவர், அவரே நமக்கு அனைத்தும் என
நினைத்துக் கொண்டு குழந்தை தாயை நம்புவது போல நாம் அவரை
நம்பி வாழவேண்டும். இதுதான்
சரணாகதி.
No comments:
Post a Comment