Sunday, June 12, 2016

இறைவனுக்கு உகந்த அசுத்தம்

இறைவனுக்கு ஐந்து அசுத்தங்களால் நாம் அபிஷேகம் செய்கிறோம். இறைவன் இதை சுத்தமாகவே ஏற்கிறான். அவை: பால் - எச்சில். தேன்-வாந்தி, கங்கை-பயன்படுத்தப்பட்ட வஸ்து, பட்டு- மரணத்தால் வந்தது. அரசமரம்- மலத்தால் வந்தது. இந்த ஐந்தும் புனிதமாகக் கருதப்படுகின்றன.
தாயின் மடியை எச்சில் படுத்திப் பால் அருந்தும் கன்றை விலக்கி கறக்கும் பாலால் அபிஷேகம் செய்கிறோம். தேனைச் சேகரித்து தேனடையில் துப்பிச் சேர்க்கின்றன தேனீ. பறவைகள் இடும் எச்சம் (மலம்) மூலமாக முளைக்கும் அரச மரமே இறைவர்க்கு உகந்த மரமாகிறது. பூஜைக்காக ஒருவர் பயன்படுத்தியதை மீண்டும் பயன்படுத்தும் பொருளுக்கு நிர்மால்யம் என்று பெயர். கங்கையை சிவபெருமான் தலையில் சூடியிருக்கிறார். எனவே இது நிர்மால்யம் ஆகும். பட்டுப்பழு தனது எச்சில் திரவத்தால் தன்னைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்துக்கொள்கிறது. அந்த திரவமே பட்டுநூலாகிறது. இந்த நூலுக்காக மரணத்தை மேற்கொள்கிறது அப்புழு. இந்த நூலால் நையப்படும் ஆடையை பகவான் விரும்பி அணிகிறான்.  ஆகவே இந்த ஐந்தும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...