பெண் பார்க்க ஜோதிடம், ஜாதகம் பார்ப்பதைப் போல அந்தக் காலத்தில் மண்ணைக் கொண்டும் பெண்ணைப்
பார்த்தார்கள். பெண் பார்க்கப் போகும் போது நான்கு வகையான
மண்ணை எடுத்துச் செல்வார்கள். வேள்விச்சாலையில் எடுத்த மண், நன்செய் நிலத்தில் இருந்து எடுத்த மண், பசு மடத்தில் இருந்து எடுத்த மண், சுடுகாட்டுக்குப் போகும்
வழியில் இருந்து எடுத்த மண் ஆகியவற்றைத் தனித்தனியாக
வைத்திருப்பார்கள்.
பெண்ணை அழைத்து அந்த மண்ணில் ஒன்றைத் தொடுமாறு சொல்வார்கள். வேள்வி மண்ணைத் தொட்டால் அப்பெண் தெய்வானுக்கிரகம் நிறைந்தவள்,
பூர்வ புண்ணியம் உள்ளவள்
என்ற முடிவுக்கு வருவார்கள். நன்செய் நிலத்து மண்ணைத் தொட்டவள் லட்சுமி கடாட்சம் நிறைந்தவள்; எந்த சம்பத்துக்கும் குறைவில்லாமல் வாழ்வாள் என்று முடிவு செய்வார்கள். பசு
மடத்திலிருந்து எடுக்கப்பட்ட மண்ணைத் தொட்டவள்
புத்திரப் பேறு மிக்கவளாக இருப்பாள் என்பதை அறிவார்கள்.
இந்த மூன்றுவகை மண்ணைத் தொட்ட பெண்ணை மணமகள் தேர்வுக்கு
எடுத்துக் கொள்வார்கள். சுடுகாட்டு மண்ணைத் தொட்டு விட்டால், அவளை உடனடியாகத் தவிர்த்துவிடுவார்கள்.
No comments:
Post a Comment