Thursday, June 23, 2016

தயார் நிலையில் இருக்கிறேன்...


ஆரம்பத்தில் நான் உம்மை புதிதாக வணங்க ஆரம்பித்த போது,  எனக்கு பல அற்புதங்களை நிகழ்த்தி உங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தினீர்.  ஆனால் இப்போது முற்றிலும் பாபா நீரே கதி என்று இருக்கிறேன்இருந்தும் ஏன் என்னை கைவிட்டு விட்டீர்கள் என்று கேட்கும் அன்பு குழந்தையே! உன்னை எப்போதும் கைவிட்டுவிட வேண்டும் என நான் நினைத்ததும் இல்லை, நீ கஷ்டப்பட வேண்டும் என்பதற்காக உன்னை படைக்கவும் இல்லை. எந்த நிலையிலும் என்னை நம்பி உனது வாழ்க்கையை நடத்தவேண்டும் என்றே நான் நினைத்து உன்னருகில் இருக்கிறேன். இதுவரை உனக்கு செய்த அற்புதமாவது உனது வாழ்க்கையை மாற்றியிருக்கிறதா? கூறு. அதெல்லாம் சாதாரண அற்புதங்கள். தொலைந்துபோன செருப்பைக் கண்டுபிடித்துத் தருவதும், காணாமல் போன நகையை தேடிப்பிடித்து தருவதும் ஒரு அற்புதமா? இதனால் உன் வாழ்க்கை மாறிவிடுமா? அதையும் தாண்டி உனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றக்கூடிய நிலைகள் இருக்கிறதே, அதுதான் உண்மையான அற்புதம். இந்த அற்புதத்தை நீ அனுபவிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். உன்னை அதற்குத் தகுதியாக்க வேண்டும் என்பதாலேயே இந்த பாராமுகம்பாராமுகம் என்றால் கவனிக்காமல் இருந்துவிடுவேன் என நினைத்துக்கொள்ளாதே. என்னதான் செய்கிறாய் என்னை சரணாகதி அடைகிறாயா என்று தயார் நிலையில்தான் நின்று கொண்டிருக்கிறேன்..............
---
அப்பா சாயிபாபா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...