Friday, June 3, 2016

பக்தியின் வகைகள்

பயபக்தியோடு சுவாமி கும்பிடுதல் என்பதைக்கேள்விப்பட்டிருப்பீர்கள். பயபக்தி என்றால் என்ன? வேறு வித பக்திகள் இருக்கின்றனவா? இதோ சில பக்தி வகைகள்...
பரபக்தி : பெயரும் உருவமும் இல்லாத கடவுள் மீது சிந்தனை செலுத்துவது பரபக்தி.
அபரபக்தி : உருவத்தின் வாயிலாக இறைவன் மீது பக்தி செலுத்துவது அபரபக்தி.
பயபக்தி: கடவுள் நமக்கு வெளியே கோயிலில், விக்கிகத்தில், வேதநூல்களில், போட்டோவில் இருக்கிறார் என நினைத்து வழிபடுவதும், கோயில்களுக்குப் போவதும், புண்ணிய நதிகளில் நீராடுவதும் பயபக்தியாகும்.
அநந்ய பக்தி: தான் மனதில் நினைத்த இஷ்ட தெய்வத்தினை உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொண்டு பக்தி செய்வது அநந்ய பக்தி. பிற தெய்வங்கள் மீது இவர்களுக்கு மனம் குவியாது.
ஏகாந்த பக்தி: இறைவனிடம் மோட்சம் உட்பட எதையும் கேட்கவோ. எதிர்பார்ப்போ இல்லாமல் மனம் முழுவதும் இறைமயமாக இருக்கப் பக்தி செய்வது ஏகாந்த பக்தி.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...