Tuesday, June 7, 2016

கோபியரின் பக்தி

எப்போதும் கண்ணனையே நினைத்துக் கொண்டிருக்கும் கோபியர் வெளியே சென்ற இடத்தில் எல்லாம் கண்ணன் நினைவாகவே இருந்து விடும் அவர்கள், இருட்டும் நேரத்தில் வீடு திரும்புகையில் மற்றவர்களிடம் தன் வீடு எங்குள்ளது எனக்கேட்பார்களாம். அந்தளவுக்கு கண்ணன் மீதுள்ள எண்ணத்தால் தங்கள் வீடு எங்குள்ளது என்பதைக்கூட மறந்து விடுவார்களாம்.
இதோ உன் வீட்டுப் பக்கமாகத்தான் இந்தப்பசு போகிறது, அதன் பின்னே சென்றால் உன் வீட்டிற்குப் போய்விடலாம் என்பார்களாம் வழி கூறுவோர். கோபியரும் பசுவின் வாலைப்பிடித்துக்கொண்டே தமது இல்லத்திற்குப் போய்ச்சேருவார்களாம், இது தான் பிரேமை பக்தி.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...