Friday, June 3, 2016

ராதா! கண்ணனைக் கண்டாயா? "

கோகுலத்தில் யசோதை கண்ணனைத் தேடி விறுவிறு என்று ஒரு வீட்டை நோக்கி நுழைந்தாள். அது வேறு யாருடைய வீடுமல்ல! கண்ணனின் காதலி ராதாவின் வீடு தான்.

ராதையைக்கண்டதும் ‘ராதா! என்பிள்ளை கண்ணனைக் கண்டாயா?" என்று கேட்டாள். அவளோ கண்களை மூடியபடியே தியானத்தில் இருந்தாள். யசோதையின் அழைப்பிற்க்கு அவளிடம் பதில் இல்லை. கண்ணனோடு இரண்டறக்கலந்து தெய்வீகப்பரவச நிலையில் இருந்த ராதா, மெல்ல உலக நினைவுக்குத் திரும்பியபடியே கண்விழித்தாள். தன் முன் அமர்ந்திருந்த யசோதையைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். அப்படியே அவளுடைய பாதங்களில் விழுந்து வணங்கினாள். யசோதை பரபரப்புடன், "ராதா! என்பிள்ளை கண்ணனைக் கண்டாயா?'' என்று மீண்டும் கேட்டாள்.

அவளோ இயல்பாக, ""கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யுங்கள். அப்போது நம் உள்ளத்தில் கண்ணன் இருப்பதைக் காண்பீர்கள்,'' என்று சொன்னாள். யசோதையும் அப்படியே தியானத்தில் லயித்தாள். ராதா தன்னுடைய தெய்வீக சக்தியை யசோதையின் மீது செலுத்தினாள். புல்லாங்குழலை இசைத்தபடியே கண்ணன் கண்ணுக்குள் தோன்றினான். அதன்பின், நினைத்த நேரத்தில் எல்லாம் கண்ணனைக் காணும் பாக்கியத்தைப்பெற்றாள் யசோதை .

ஒருமுறை ராதை, தன் வீட்டுக் கிளிகளுக்கு கிருஷ்ண நாமம் கற்றுக் கொடுத்தாள். சில தினங்களுக்குப் பின் அதை மாற்றி ராதா நாமம் கற்றுக் கொடுத்தாள். இதைக் கண்ட பலரும், இது ராதாவின் அகங்காரம் என்று எண்ணிப் பரிகசித்தனர். ஆனால் ராதையோ தன் தோழிகளிடம், ""கிருஷ்ண நாமம் கேட்டு எனக்கு ஆனந்தம்; ராதா நாமம் கேட்டு கிருஷ்ணருக்கு ஆனந்தம். கிருஷ்ணரின் ஆனந்தத்தையே நான் பெரிதாக எண்ணியதால், என் கிளிகளுக்கு ராதா நாமம் கற்றுக் கொடுத்தேன்'' என்றாளாம்.

ராதையின் கிருஷ்ண பக்தியைப் பற்றிக் கூறும் வேடிக்கையான கதை இது! ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு…….. ஒருசமயம் ராஸலீலா வைபவத்திற்காக ராதை, பார்வதியை அழைத்திருந்தாளாம். அது பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. பார்வதியும் மகாதேவரிடம் அனுமதி வேண்ட, சிவனோ தானும் பெண் வேடத்தில் வந்து கலந்து கொள்வேன் என்று பிடிவாதம் செய்து உடன் வந்தார். அழகிய பெண்ணாக வந்த பரமசிவனை அடையாளம் கண்டு கொண்ட கண்ணன், ராதையுடன் செய்து கொண்டிருந்த ராஸலீலையிலிருந்து விலகி வந்து ஈசனை வரவேற்க, தன்னைத் தவிர்த்து வேறொரு பெண்ணுடன் கண்ணன் நடனமாடுவதைக் கண்ட ராதா கோபம் கொண்டு ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டாள். பரமசிவன் அவளை சமாதானம் செய்து தரிசனம் கொடுத்தாராம்.

"
கண்ணா உன்னை விட்டு நான் வாழ்வதெப்படி?" என ராதை கேட்க "நான் என்றும் யுகயுகமாய் உன்னுடன்தான் இருப்பேன்" என்று ஆறுதல் சொன்ன கண்ணனை இன்றும் நாம் நினைவுறும்போது முதலில் ராதைதானே வந்து நிற்கிறாள்.

ஹரே கிருஷ்ண ஹரே  கிருஷ்ண 
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...