Tuesday, June 7, 2016

சோதனையை சகித்துக் கொள்



பாபா தனது குரு தன்னை சோதித்தது பற்றி மூதாட்டி ஒருவருக்குக் கூறியதை சத்சரித்திரம் 18--ம் அத்தியாயம் கூறுகிறது.
என் குருவுக்கு மிக நீண்டகாலம் சேவை செய்தேன். எனினும் அவர் எனது காதுகளில் எவ்வித மந்திரத்தையும் ஓதவில்லை, மாறாக, அவர் என் தலையை மொட்டை அடிக்கச் செய்து இரண்டு பைசாக்களைத் தட்சணையாகக் கேட்டார். இந்த இரு பைசாக்கள் உறுதியான நம்பிக்கை மற்றும் பொறுமை ஆகியவைஎன்று கூறினார்.
பாபா பக்தர்களானதும் தங்களுக்கு லாபகாலம் ஆரம்பித்துவிட வேண்டும் என எதிர் பார்க்கிறவர்கள் பலர் உண்டு. பல ஆண்டு சேவை சாதித்தாலும் தனக்கே உரிய வழி முறையில் பாபா லீலை செய்வார் என்பதை மறைமுகமாகக்கூறியிருக்கிறார்.
தலையை மொட்டை அடித்து, அதாவது நம் கவுரத்தை, கண்ணியத்தைக் குலைப்பது போன்ற நிகழ்வுகளாலோ, வேறு விதத்தாலோ நம்மை முற்றிலும் தாழ்த்தி, நம்பிக்கை மற்றும் பொறுமை ஆகியவற்றை இன்னும் கடைப்பிடி என்று விட்டுவிடுவார்.
பொருளாதார விடுதலை போன்றவற்றை அனுபவிக்கும் முன்பு பக்தி செய்து இறைவனை அனுபவிக்க வேண்டும் என்பதாலேயே கஷ்டம் கொடுத்து நம்பிக்கையோடு இருக்கக் கூறுகிறார். இதில் ஜெயித்தால் நம் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
தோற்றால்?
அடுத்த வாய்ப்புக்குக் காத்திருக்கவேண்டும். எனவே, பிரச்சினை வந்தாலும் அதை சகிக்கக்கற்றுக் கொள்ளுங்கள், நிச்சயம் விடிவுண்டு.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...