பிரம்மா இழந்ததும் இடைச்சி பெற்றதும்!


கிருஷ்ணாவதாரத்தின் மீது சந்தேகம் கொண்ட பிரம்மா, கிருஷ்ணனை சோதிப்பதற்காக ஆயர்குலச்சிறுவர்களையும் அவர்களுடைய பசுக்களையும் ஒளித்துவைத்துவிட்டார். இதை அறிந்த கண்ணன், தானே ஆயர்குலச் சிறுவர்களாகவும், பசுக்களாகவும் மாறி அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதை அறியாதவர்களான அந்தப் பெற்றோர், வழக்கத்தை விட பிள்ளைகள் மீது அதிக அன்பு செலுத்தினார்கள்; பசுக்கள் அதிகமாக பால் தந்தன.
சில காலம் கழித்து பிரம்மா கோகுலத்திற்கு வந்த போது, பிள்ளைகளும் பசுக்களையும் கண்டு திடுக்கிட்டார். இவை அனைத்தும் கண்ணனின் லீலைகள் என்பதை உணர்ந்த அவர், அறியாமையால் ஆயர் குலப் பெண்கள் பகவானை தங்கள் குழந்தையாகப்பெற்றிருக்கிறார்கள்; நானோ அதே அறியாமையால் பகவானை இழந்துவிட்டேனே என வருந்தினார்.

Powered by Blogger.