எங்கும் இருப்பவர் பாபா!

சாயி பாபா, பாபா கோயில்களில் மட்டும் வசிப்பவர் அல்லர். அவர் தம்மை உண்மையாக நம்பி தன்னிடம் அடைக்கலம் புகும் ஒவ்வொரு பக்தரின் உள்ளத்திலும் வாழ்பவர். தான் ஒருவரின் உள்ளத்தில் இருக்கும் போது அந்த பக்தரின் வாழ்வை மாற்றும் விதத்தில் ஆலோசனைகள் வழங்குவது, அனைத்திலும் நல்லதையே பெற்றுத் தருவது போன்றவற்றைச் செய்கிறார் பாபா. சில சமயம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும் பக்தர்களை யார் மூலமாவது தன்னிடம் வருமாறு செய்து அவருக்குத் தீர்வை தருகிறார். இதனால் பல பக்தர்கள் சாயி பாபா உடனே அற்புதம் செய்துவிடுவார் என நினைக்கிறார்கள்.
Powered by Blogger.