நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்:தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை 55D

கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்:

மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Sunday, June 5, 2016

நீ என்னை எவ்விதம் உணர்கின்றாயோ அவ்விதமே நான் இருப்பேன்புகழ் பெற்ற ஞானியான காகாபுராணிக் மஹராஜ் என்று அழைக்கப்பட்ட தோபேஸ்வரைச் சேர்ந்த ரகுநாத் மஹராஜ் பூனாவுக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் அடியவர்களின் பெரிய கூட்டத்தால் சூழப்பட்டார். பலரும் அவரை தங்கள் வீட்டுக்கு ஒரு வேளையாவது விருந்துண்ண வரும்படி வேண்டினர். அவர்களுள் ஷீர்டி சாயிபாபாவின் பக்தரான H.V.சாத்தே (ராவ் பகதூர் ஹரிவினாயக் சாத்தே) என்பவரும் இருந்தார். காகாபுராணிக், சாத்தேயின் வேண்டுகோளை ஏற்க இயலாதென்று மறுத்து விட்டார். சாத்தே வருத்தத்துடன் திரும்பினார். சில நிமிடங்களில் காகாபுராணிக், சாத்தேயை அழைத்து, உற்றுப்பார்த்து, பின்னர் புன்னகையுடன் மாலை அவருடைய வீட்டுக்கு வருவதாகக் கூறினார். சாத்தே மட்டற்ற மகிழ்ச்சியுடன், வரவேற்புக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக வீட்டுக்குத் திரும்பினார்.
மாலை விருந்து முடிந்ததும் சாத்தே, காகாபுராணிக்கிடம், முதலில் மறுத்துவிட்டு பிறகு, முடிவை மாற்றி தன் வீட்டுக்கு வர சம்மதித்ததின் காரணத்தை பணிவாகக் கேட்டார். அதற்கு காகாபுராணிக் சிரித்துக் கொண்டே, "உன் வீட்டுக்கு வர மறுத்தால் சாயி மஹராஜ் என்னை விட மாட்டார்" என்றார். 
ஞானிகள் ஒருவருக்கொருவர் எவ்வளவு புரிதலுடனும், ஒத்திசைவுடனும் செயல்படுகின்றனர் !!!

நீ என்னை எவ்விதம் உணர்கின்றாயோ அவ்விதமே நான் இருப்பேன்.
யார் என்னிடமே ஆர்வமுள்ளவர்களாகவும், என்னையே தியானிப்பவர்களாகவும், என்னையே அடையத்தக்க குறிக்கோளாகவும் கொண்டிருப்பார்களோ அவர்களின் யோகச் ஷேமங்களை நானே ஏற்றுக் கொள்கிறேன்.
-
பகவான் ஷீர்டி சாய்பாபா

அனந்தகோடி ப்ரம்மாண்ட நாயகா ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரம்மோ ஸ்ரீஸச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹராஜ் கீ ..... ஜெய்.

மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்