Monday, June 6, 2016

பாபா கடவுளா?

நமது உணர்வுகளுக்கும், உண்ர்ந்திருப்பதற்க்கு ஏற்பவும் மட்டுமே நாம் பிறரை எடைபோடுகிறோம். ஞானிகள் விஷயத்திலும் இப்படித்தான் நினைக்கிறோம்.
ஜ்ஞானி து ஆத்மைவ மே மதம்
என்று கீதையில் சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்துப் படியுங்கள். இதில் ஞானியானவன் நானே என்று பகவான் சொல்லியிருக்கிறார். உங்கள் கருத்துப்படி பார்த்தால் சிவனைத் தவிர பிற தெய்வ மூர்த்தங்கள் அனைத்துமே இறந்தவர் கணக்குத்தான். அப்படியிருந்தபோதும் நீங்கள் ஏன் சிவனை மட்டுமே உபாசிக்கவில்லை?  
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று வள்ளுவர் கூறியதை அறிவீர்களா?  ஞானி மட்டுமில்லை, பகவானையும் மற்ற உயிர்கள் அனைத்தையும் வேற்றுமையின்றி யார் அன்பு காட்டி நேசிக்கிறாரோ அவரே கடவுள். அப்படி அன்பு காட்டி நேசித்த பாபா கடவுள்.
கடவுளும் ஞானியும் ஒரு சேர தோன்றினால் குருவே அதாவது ஞானியே வணங்கத்தக்கவர். அவரே இறைவன் கோட்பாடுகளை எடுத்துக்கூறி நம்மை வழிநடத்துகிறார். அவர் கடவுளை விடவும் மேலானவர். பாபாவை ருசித்துப் பார்த்தால் பாபா கடவுளா? செத்தவரா? என்பது தெரியும். அவர் பரமாத்மா, பரப்பிரம்மம், அந்தர்யாமி, ஆதி அந்தம் இல்லாத வேத முதல்வன். இப்படி நிறைய உணர்ந்து கொள்ள முடியும். காலம் உங்களுக்கு கற்றுத்தரும். 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...