Monday, May 9, 2016

பரப்பிரம்மன் ஆவது எப்போது?

ஈஸ்வரனுக்கும் பிரம்மனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதன் எப்போது பரப்பிரம்மன் ஆகிறான்?
( கே.வி. சுதாகரன், சென்னைடூ 18)
சிலர்  ஈஸ்வரன் என்றால் நெற்றிக் கண் வைத்த கடவுள் என்றும், பிரம்மா என்றால், நான்கு தலை உள்ள கடவுள் என்றும் நினைத்துக்கொள்கிறார்கள்.
ஈஸ்வரன் அனைத்துமானவன். அனைத்திற்கும் மேலானவன். அண்ட சராசரங்களையும் உருவாக்கி, ஆள்பவன். எல்லா சக்திகளுக்கும் மேலானவன்.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது.
பிரம்மன் என்பது, ஈஸ்வரன் போன்ற நிலையை அடைவதாகும். அதாவது மனதை சுத்தப்படுத்தி, தத்துவ நு}ல்கள் கூறுவன வற்றை ஆராய்ந்து பார்த்து, இறைவனை அடையும் வழியை தியானித்து,அனைத்திலும் பற்றின்றி, தன்னைப்பற்றியும், தனது தோற்ற  மூலத்தைப் பற்றியும் சிந்தித்து தன்னைத் தான் அறிந்து கொள்ளும் நிலைதான் பிரம்ம நிலை.
இறைவன் சத்யமாக, ஞானமாக, முடிவற்ற வனாக இருப்பதை உணர்ந்து கொள்ளுகிறான். தன்னையும் அவ்வாறே உணர்கிறான். அனைத்தும் தானே என்று உணர்வதையும், தன்னிலிருந்தே அனைத்தும் உருவாகின்றன என்பதை உணர்வதும் பிரம்ம நிலை. அனைத்தையும் கடந்து நிற்கிற இந்த நிலை தோன்றும்போது கடவுள் ஆகிறான்.
கலகங்களின் நடுவில் சமாதானத்தையும், வெறுப்பு, பொறாமை போன்றவற்றின் நடுவே அன்பையும், அறியாமையின் நடுவே அறிவையும் யார் ஒருவன் ஏற்படுத்துகிறானோ அவன் அதைப்படைத்தவன் ஆகிறான். பிறரால் முடியாத இந்த நிலைக்கு உயர்ந் தவனே பரப்பிரம்மம் ஆகிறான்.


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...