Friday, May 20, 2016

நானாசாஹிப் சந்தோர்கார்


வண்டியையும் காணோம். ஓட்டி   வந்த வண்டியோட்டியும் காணோம். எங்கோ மறைந்து போனான். பாபாவின் அடியவரான நானாசாஹிப் சந்தோர்கார் ஷீர்டியிலிருந்து சுமார் 130 மைல் தூரத்தில் உள்ள ஜாம்நேரின் மாம்லத்தாராக இருந்தார். அவரது மகளான மீனாத்தாய், கருவுற்றுப் பிரசவிக்க இருந்தாள். அவளது பிரசவம் மிகவும் கஷ்டமான நிலையில், இரண்டு மூன்று நாட்களாக பிரசவ வேதனையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். .எந்தவித பரிகாரங்களை முயற்சித்தும் பலனில்லை. நானாசாஹிப் பாபாவை தியானம் செய்து, அவரின் உதவியைத் தொழுது வேண்டினார்.
அப்போது ஷீர்டியில், பாபுகிர் புவா என்று பாபாவால் அழைக்கப்படும் ராம்கிர் புவா என்பவர் கண்டேஷிலுள்ள தன் சொந்த ஊருக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்பாபா அவரைக் கூப்பிட்டு, ஒரு உதிப் பொட்டலத்தையும் ஆரத்தி பாடல் எழுதிய காகிதத்தையும் அவரிடம் கொடுத்து, “ நீ ஜாம்நேர் சென்று, நானாசாஹிப் சந்தோர்காரிடம் இந்த உதியையும், ஆரத்தியையும் கொடுத்துவிட்டு, பிறகு உன் சொந்த ஊருக்குச் செல்என்றார் . {ஸ்ரீமாதவராவ் அட்கர் எழுதியஆரத்தி சாயிபாபாஎன்ற இப்பாடல் ஷீர்டியிலும், மற்றும் எல்லா பாபா ஆலயங்களிலும், ஆரத்தி சமயங்களில் பாடப்பட்டு வருகின்றது}.
அதற்கு ராம்கிர் புவா, “ என்னிடம் இரண்டே ரூபாய்தான் உள்ளது . இதை வைத்துக்கொண்டு ஜல்கான் வரைதான் செல்ல முடியும். அங்கிருந்து 30 மைல் தொலைவில் உள்ள ஜாம்நேர் செல்ல போதுமானது இல்லை என்றார்.
அதற்கு பாபா, “ எல்லா ஏற்பாடும் தன்னால் நடக்கும். கவலைப்படாதே. சொன்னதை செய் என்றார்.
ராம்கிர் புவா, உதி, ஆரத்தியோடு கிளம்பி, அதிகாலை இரண்டு மணிக்கு ஜல்கானை அடைந்தார். அவரிடம் இரண்டு அணாக்கள் மட்டுமே மீதமிருந்தன. இதை வைத்துக் கொண்டு எப்படி ஜாம்நேர் போவது என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, “ யார் ஷீர்டியிலிருந்து வந்திருக்கும் ராம்கிர் புவா என்ற குரல் கேட்டது..அப்படி கேட்டவரிடம் ராம்கிர்புவா, “ நீங்கள் தேடும் ராம்கிர் புவா நான்தான் என்றார். அதற்கு அந்த ஆசாமி, “ நான் நானாசாஹிப் சந்தோர்காரிடமிருந்து வருகிறேன். நானாசாஹிப் தங்களை அழைத்துவர வண்டியும், தாங்கள் பசியார சிற்றுண்டியும் அனுப்பியுள்ளார்என்றார் .
ராம்கிர்புவா மகிழ்ந்து சிற்றுண்டியை உண்டு விட்டு அந்த ஆசாமியுடன் கிளம்பினார். நல்ல ஜோடிக் குதிரைகளுடன் கூடிய பிரமாதமான வண்டி. பொழுது விடிந்த போது ஜாம்நேரை அடைந்தனர்.
ராம்கிர்புவா வண்டியை நிறுத்தச் சொல்லி, சிறுநீர் கழிக்கச் சென்று திரும்பி வந்தார். வண்டியையோ, வண்டியோட்டியையோ காணாமல் பேரதிர்ச்சியடைந்தார்.
விசாரித்துக் கொண்டு நானாசாஹிப் வீட்டையடைந்தார். நானாசாஹிப்பிடம், பாபா தன்னை அனுப்பியுள்ளதாக அறிமுகப் படுத்திக் கொண்டு, உதியையும், ஆரத்தியையும் கொடுத்தார். நானாசாஹிப் அகமகிழ்ந்து, தன் மனைவியை அழைத்து, “மீனாத்தாய்க்கு உதியை தண்ணீரில் கரைத்துக் கொடுத்துவிட்டு, ஆரத்தியைப் பாடுங்கள் என்றார்.
அவ்வாறு செய்த சில நிமிடங்களிலேயே, பிரசவ அறையிலிருந்து, “பிரசவம் பத்திரமாக ஆனதுஎன்று செய்தி வந்தது. நானாசாஹிப் மகிழ்ந்து பாபாவை தியானித்து நன்றி கூறினார்.
ராம்கிர்புவா, நானாசாஹிப் சந்தோர்காரிடம், குதிரைவண்டி, சிற்றுண்டி ஆகியவற்றை அனுப்பியதற்கு நன்றி தெரிவித்தார். நானாசாஹிப் ஆச்சரியமடைந்து, “”நான் குதிரைவண்டியோ, சிற்றுண்டியோ எதுவும் அனுப்பவில்லையே. ஷீர்டியிலிருந்து தாங்கள் வருவதே எனக்குத் தெரியாதே என்றார். பாபாவின் அற்புதத்தை எண்ணி ஆனந்தம் கொண்டனர்.

சாய்நாதன் தன் பக்தர்களைக் கைவிடமாட்டார். அவர்களது துன்பங்களைத் தானே ஏற்று, அவர்களைக் காப்பார் என்பது சத்தியம்.

யார் என்னிடமே ஆர்வமுள்ளவர்களாகவும், என்னையே தியானிப்பவர்களாகவும், என்னையே அடையத்தக்க குறிக்கோளாகவும் கொண்டிருப்பார்களோ அவர்களின் யோகச் ஷேமங்களை நானே ஏற்றுக் கொள்கிறேன்.
                                                                                                           -
பகவான் ஷீர்டி சாய்பாபா

அனந்தகோடி ப்ரம்மாண்ட நாயகா ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரம்மோ ஸ்ரீஸச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹராஜ் கீ ..... ஜெய்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...