Monday, May 16, 2016

உனக்கு ஆண் குழந்தை பிறக்கும்


ஹர்தா என்ற இடத்தைச் சேர்ந்த சிந்தியா என்ற பெண்ணுக்கு ஏழு பெண் குழந்தைகள். ஆண் வாரிசு வேண்டும் என்றும், குழந்தை பிறந்ததும் தரிசனத்திற்கு அழைத்துவருவதாகவும் கான்காபூரில் வேண்டிக்கொண்டார். இது நடந்தது 1903 ம் ஆண்டு. அடுத்த ஆண்டே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அவர் வேண்டுதலை மறந்துவிட்டார். 1911ம் ஆண்டு அவர்கள் சீரடிக்கு வந்து பாபாவை தரிசனம் செய்தபோது, அந்த அம்மையாரைப் பார்த்து பாபா கோபப்பட்டார்.
விதியின்படி உனக்குஆண் குழந்தையே கிடையாது. நான் என் உடலின் ஒரு பகுதியைக் கிழித்து உனக்கு ஓர் ஆண் மகனைக் கொடுத்தேன். நீயோ குழந்தை பிறந்ததைப் பற்றி பெருமையடித்துக் கொண்டாயே தவிர, சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை எனக்கக்தினார்.
கான்காபூரைச் சேர்ந்த நரசிம்ம சரஸ்வதியுடன் பாபா ஒன்றுபட்டவர் என்பதை உணர்ந்துகொண்டார் அந்த அம்மையார்.
பெருங்களத்தூர் பிரார்த்தனையில் கலந்துகொண்டு குழந்தை பெற்ற எத்தனையோ பேர், அதன்பிறகு இந்தப் பக்கம்கூட வந்தது கிடையாது. ஆனாலும் நாளுக்கு நாள் குழந்தை வரம் கேட்டு வருவோர் எண்ணிக்கைக் கூடிக்கொண்டுதான் உள்ளது.
உங்களுக்கு நம்பிக்கை இருக்குமானால், உடல் ரீதியான பிரச்சினைகள், பித்ரு தோஷம், நாக தோஷம் போன்ற பிரச்சினைகள், ஜாதக ரீதியாகவே குழந்தை யில்லை என்ற பிரச்சினை என எது இருந்தாலும் பயப்படாமல் பாபாவின் உதியை நம்பிக்கையோடு சாப்பிடுங்கள். இத்தனை ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த உங்களுக்கு நிச்சயம் இந்த முறை ஆண் குழந்தை பிறக்கும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...