Saturday, May 21, 2016

மே 23 சீரடியில் பல்லக்கு ஊர்வலம்

சாயி பக்தியைப் பரப்பியவர்களில் முதன்மையானவர்கள் என்றால் பூஜ்ய குரு நரசிம்ம சுவாமிஜி, ராதாகிருஷ்ணன் சுவாமிகள், விபூதி பாபா, ஆந்திராவில் பரத்வாஜ் சுவாமிகள், கரூர் நரசிம்ம பாபா என ஒரு சிலரை மட்டுமே விரல்விட்டுக் கூறமுடியும்.
பக்தியைப் பரப்புகிறவர்கள் வேறு, பாபாவுக்கு கோயில் கட்டுகிறவர்கள் வேறு. கோயில் கட்டுவோர் எல்லாம் பக்தியைப் பரப்புகிறவர்கள் கிடையாது. ஆனால் கோயில்களையும் கட்டி, பக்தியையும் பரப்பிய அடியார்களின் வரிசையில் வைத்துப் போற்றப்படுகிறவர் நமது குருஜி சாயி வரதராஜன்.
சாயி பக்தியை மிக எளிமையாக எடுத்துக்கூறி மக்கள் மனதில் நம்பிக்கை, பொறுமை ஆகியவற்றை விதைத்து தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வைத்த இவருடைய எழுத்துக்களும் வார்த்தைகளும் படித்தவர் முதல் பாமரர் வரையுள்ளவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தை இவர் நிறுவியபோது மிகச்சிறிய இடம் என்று சொன்னார்கள். ஆனால் இது உலகம் முழுவதிலும் உள்ள சாயி பக்தர்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்திருக்கிறது.
கூட்டுப் பிரார்த்தனையின் வலிமையை மக்கள் மத்தியில் உணர்த்தி அதைப் பிரபலப்படுத்தியதோடு, அன்றாட வாழ்வில் சாயி நாம ஜெபத்தை பக்தர்களின் இதயங்களில் புகுத்தி வெற்றி கண்டவர் நமது குருஜி.
சாயி பக்தியில் சாயி தரிசனத்திற்கு முன்பு, சாயி தரிசனத்திற்குப் பின்பு என்று கூறும் அளவுக்கு இவருடைய பத்திரிகை வலிமையான நம்பிக்கையை அடித்தளமாக்கி கஷ்டப்படும் மக்களுக்கு நம்பிக்கையை அளித்தது. இவரிடம் பிரார்த்தனை செய்து பலன் பெற்ற ஆயிரக் கணக்கானவர்கள் இவருடைய பின் புலத்தில் இருக்கிறார்கள். இவருடைய வாக்கை சாயி வாக்காக ஏற்று நடக்கிற அடியார்கள் இருக்கிறார்கள்.
காசு பணம், பொருள் என எதையும் எதிர்பாராமல் இறையருளை இலவசமாகத் தருகிற இந்தக் கொடையாளரின் ஜன்ம தினத்தைப்போற்றும் விதமாகவும், பிறரிடம் இருந்து எதையும் பெறாதவரான இவருக்கு அளிப்பதாக நினைத்தும் மற்றவர்களுக்கு இந்த தானங்களை சாயி பக்தர்கள் அளிக்கிறார்கள்.
இந்த ஆண்டும் இவ்வாறே செய்து சகல உயிர்களிலும் வாழ்கிற நமது இறைவனாகிய பாபாவையும், எளிமையான தோற்றம், வாழ்க்கை முறை, பக்திமுறை ஆகியவற்றை கற்பித்து பிரார்த்தனைகளை நிறைவேற்ற உதவிய குருவையும் மகிழ்விப்போமாக.
நமது குருஜி அவர்களின் ஜன்ம தினம் மே 23 அன்று அவரால் நன்மை பெற்ற சாயி பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருவதை அறிவீர்கள். ஒவ்வொரு ஆண்டும் சீரடியில் பல்லக்கு ஊர்வலம் நடத்தி தங்கள் குருவுக்கு சாயி பக்தர்கள் நன்றி செலுத்துகிறார்கள்.
இந்த ஆண்டும் சீரடியில் பல்லக்கு ஊர்வலம் நடைபெறுகிறது. இதற்காக ஐம்பது பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். சீரடிக்கு வர இயலாதவர்கள் கீரப்பாக்கம் பாபா ஆலயம் மற்றும் பெருங்களத்தூர் பாபா ஆலயம் வந்து பாபாவை தரிசித்துச்செல்லலாம்.
ஸ்ரீ சாயி வரதராஜன் மே 22 முதல் 24 வரை சீரடியில் இருக்கிறார். தரிசிக்க விரும்புவோர் அதன் பிறகு வரலாம்.
அன்னதானம் செய்ய விரும்புவோர் முன் பதிவு செய்துகொள்ளவும்.
& சாயி வீரமணி

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...