சாய் பாபாவின் அற்புதங்கள்


ஒரு முறை தாமியா என்பவர் தான் தங்கியிருந்த இடத்திற்கு சாய் பாபாவை விருந்திற்கு அழைத்தார். ஆனால் தன்னால் வர இயலாது என்றும், அவருக்கு பதிலாக பாலா படேலை அனுப்பி வைப்பதாக பாபா கூறினார். பாலா படேல் கீழ் ஜாதியை சேர்ந்தவர். அதனை காரணமாக காட்டி, விருந்தாளியான அவரை அவமரியாதையாகவோ இழிவுபடுத்தவும் விதமாகவோ நடத்தக்கூடாது என பாபா எச்சரித்தார். 'உங்களுக்கு தொலைவாக அவரை அமர வைத்து, அவரை பார்த்து கூச்சலிடுவதோ அல்லது இழிவுபடுத்தவோ கூடாது', என தெளிவாக கூறினார். விருந்தை தயார் செய்த தாமியா பாபாவிற்காக தட்டுக்களை எடுத்து வைத்தார். 'வாருங்கள் சாய்' என அழைத்தார். உடனே எங்கிருந்தோ வந்த ஒரு கருப்பு நாய் அந்த தட்டில் இருந்து சாப்பிட்டது. அதன் பிறகு, தாமியாவும், பாலாவும் ஒன்றாக அமர்ந்து உணவை அருந்தினார்கள். சாய் பாபாவிற்கு சடங்குகளின் மீது நம்பிக்கை கிடையாது. தூய்மையான பக்தி மற்றும் நம்பிக்கையால் மட்டுமே அவரை வெல்ல முடியும். சாய் பாபாவின் அற்புதங்கள் பற்றி மேலும் அறிந்தால் அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்காதீர்கள்.

Powered by Blogger.