பெருங்களத்தூர்
பாபா பிரார்த்தனை
மையம்
கீரப்பாக்கத்தில் பாபா ஆலயம்
நிறுவும்
சேவையைச் செய்து வருகிறது.
மலைப்பாதை
அமைத்து கீழ்ப்பக்கத்தில்
பாபாவுக்கு
கருங்கல் விக்ரஹம் நிறுவப்பட்ட
கோயில்
உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது
இதே
இடத்தில் பளிங்கு சிலை நிறுவும் திட்டம் உள்ளது.
அன்னதானக் கூடம், பக்தர்
தங்கும் இடம் ஆகியவை உருவாக்கப்பட்டு
வருகின்றன.
தற்போது
மலையின் மீது பாபா அமர
வேண்டிய
இடத்தில் பெருமாள் விக்ரகம் நிறுவப்பட்டு கோயில் அமைந்துவருகிறது. இதே பகுதியில் பாபாவுக்கு தனிக் கோயில்
நிறுவும்
பணியும்
தொடர்ந்து நடைபெறுகிறது.
தற்போது
கட்டிடம் முழுமையடைய வேண்டிய
கட்டாயத்தில்
உள்ளது. எவ்வளவோ இழப்புகள்
தடைகளைத்
தாண்டி வளர்ந்துகொண்டிருக்கும்
இந்த ஆலயப்
பணிக்கு சாயி தரிசனம் வாசகர்
களின்
உதவியை நாடுவதுப் பொருத்தமானது
என நாங்கள்
கருதியதால் இந்த வேண்டுகோளை
முன்வைத்துக்
கேட்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
நாற்பத்து
ஏழாவது அத்தியாயத்தில் கவுரி
என்ற
பெண்ணிடம் பாபா கூறியதைப் படித்துப்பாருங்கள்:
“கோயிலுக்காகப்
பணம் செலவு செய்யப்பட
வேண்டும்
என்று உன் கணவனைத் தொந்தரவு
செய்யாதே.
உன்னுடைய பக்தியும் விசுவாசமும்
இறைவனுக்குப்
போதும். நீ கொடுக்க விரும்புவதைக் கொடு.
உன்னுடைய
பணத்திலிருந்து மனம் உவந்து
ஒரு பைசா
கொடுத்தாலும் அது ஒரு லட்சத்திற்கு
ஈடாகும்.
கணவனைக் கலந்தாலோசித்த பிறகு
அதை
இறைவனுக்கு அர்ப்பணம் செய்.
வீணாகச்
சலிப்படையாதே. கொடுப்பதை மனம்
உவந்து
கொடுக்க வேண்டும். தனக்கு எது
சொந்தமோ
அதிலிருந்து எவ்வளவு சிறியதாக
இ
ருந்தாலும் அதை அர்ப்பணம் செய்யவேண்டும்.
இது
விஷயத்தில் பக்தி பாவமே பிரதானம். அது உனக்கு
இருப்பது கடவுளுக்குத் தெரிந்திருப்பதால் உன்னைக் கொடு கொடு என்று சொல்கிறார்.
இறைவனுடைய உந்துதலை சரியாகப்புரிந்துகொள்.
ஆகவே,
உன்னிடம்
எவ்வளவு சிறிய தொகை
இருப்பினும்
சரி, அதைக்
கொடுத்துவிட்டு நிம்மதியாக இரு. அன்பில்லாமல் எதையும் அளிப்பது உசிதமன்று. இறைவன் அதை சிறிதும்
விரும்புவது
இல்லை.
பக்தி
பாவனை இல்லாமல் எவன் கொடுக்கிறானோ, அவன்
தருவது எந்த மதிப்பையும்
பெறாது.
கடைசியில் அதற்கு அடியோடு பயனில்லாமல் போய்விடும். அதை அவன் தாமதமின்றி அனுபவப் பூர்வமாக அறிந்துகொள்வான்.
தெய்வக்
குற்றம் நேருமென்று பயந்தோ, சமூகத்தின்
உந்துதலுக்கு இணங்கியோ, தர்ம
சங்கடத்திலிருந்து விடுபடவோ, அன்பின்றி
அளிக்கப்படுவதை இறைவன் விரும்புவதில்லை. அன்புடன் அளிக்கப்படுவது எத்துணை சிறியதாக
இருந்தாலும் இறைவன் விலை உயர்ந்ததாக அதனை ஏற்றுக்கொள்கிறார்”.
இப்படி
எழுதப்பட்டுள்ளது.
மூன்று
ஆண்டுகளாகப் போராடி மலையின்
கீழ்ப்பக்கத்தில்
பாபா ஆலயம், அன்னதானக்கூடம்,
போர்வெல்,
மலைக்குச்
செல்ல சாலை
என அமைத்தோம்.
தற்போது பாபா ஆலயம்
கீழ்ப்பகுதியில்
முடிந்த நிலையில் தற்போது
மலையில்
பெருமாள் ஆலயம் அமைவதற்கான
வேலைகள்
நடந்து வருகின்றன.
நான்
அமர்ந்தால்தான் வேலை எழ விடுவேன்
எனப்
பெருமாள் கூறியதாக நரசிம்மாச்சாரியார் கூறிய
வார்த்தைகள் உண்மையோ என நினைக்கும் வண்ணம் வேலைகள் துரிதமாக நடைபெற ஆரம்பித்துள்ளன. முதல் கட்டமாக
பெருமாள்
ஆலயத்தை
முழுமையாக வடிவமைக்க வேண்டிய நிலையில் இருப்பதால் பக்தர்கள் மற்றும் சாயி தரிசனம் வாசகர்கள் மீண்டும்
ஒருமுறை தங்களால் முடிந்த சில பொருட்களை
வாங்கித்தந்தால் நலமாக இருக்கும் என நம்புகிறோம்.
பெருமாள்
ஆலயத்தின் தொடர்ச்சியாக மலையில் பாபா ஆலயம் நிச்சயம் எழும்பும். இது மட்டும் இல்லாமல் பக்தர்களின்
வேண்டுகோளை
ஏற்று,
ஊர்
அனுமதியுடன் சிவனைப் பிரதிஷ்டை
செய்யவும்
சாயி பக்தர்கள் முன் வந்து இருக்கிறார்கள்.
உங்களுடைய
பங்களிப்பையும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
வேலையாட்கள்
சம்பளம் போன்றவை இல்லாமல் கம்பி வகையறாக்களில் 20 எம்.எம். கம்பி 40, 16 எம்.எம். கம்பி 40, 12 எம்.எம். கம்பி 200, 10 எம்.எம்.கம்பி 200 தேவைப் படுவதாகக்
கூறியிருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு கம்பி என்றால்கூட ஐநூறு வாசகர்கள் சேர்ந்தால் இந்த
கம்பியை வாங்கித் தந்துவிட முடியும்.
அதேபோல முன்னூறு
வாசகர்கள்
சேர்ந்தால் ஆளுக்கு ஒரு மூட்டை
சிமெண்ட்
வாங்கிவிடலாம்.
ஆளுக்கு
நூறு ரூபாய் என்றால்கூட 180
பக்தர்கள்
முக்கால்
ஜல்லி எட்டு சிஎப்டி அனுப்பி வைக்கமுடியும். இந்தப் பணிகள் மே மாதத்திற்குள்
முடிவடைந்து கூரைத் தளம் அமைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இந்த உதவியை
செய்து தர அன்புடன் வேண்டுகிறோம்.
கீரப்பாக்கம்
பாபா ஆலயத்தில் முன்னாள்
தாசில்தார்
சம்பந்தம் இருக்கிறார். நேரடியாக
அவரிடம்
பொருளாகவோ ரொக்கமாகவோ
சமர்ப்பிக்கலாம்.
பெருங்களத்தூர் சாயி பாபா
ஆலயத்தில்
சாயி வரதராஜனை நேரில் தொடர்பு
கொண்டு
இந்த கைங்கர்யத்தைச் செய்யலாம்.
No comments:
Post a Comment