Sunday, May 15, 2016

ஷிர்டி சாய் பாபா கோயில், கர்னூல்


70 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டுள்ள இந்த ஷிர்டி சாய் பாபா கோயில் ஒரு தனித்தன்மையான ஆன்மீக ஸ்தலமாகும். சாய் பாபா கோயில்களிலேயே அளவில் மிகப்பெரிதான இது ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஒரு சலவைக்கார பக்தரால் இந்த கோயில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
 

நட்சத்திர வடிவில் இந்த ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இங்கு பாபாவுக்கு பூஜைகள் செய்விக்கப்படுகின்றன. இந்த பூஜைச்சடங்குகளில் பங்கேற்க வெகு தூரத்திலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
 

லட்சுமி தேவி மற்றும் ஆஞ்சநேயர் சிலைகளும் இக்கோயில் வளாகத்தில்காணப்படுகின்றன. தெய்வீகம் கமழும் சாந்தமான சூழல் இக்கோயிலில் நிரம்பியிருப்பது ஒரு விசேஷமான அம்சமாகும்.
 

எப்போது வேண்டுமானாலும் இந்த கோயிலுக்குள் தரிசனம் மேற்கொள்ளலாம் என்றாலும், பூஜைச்சடங்குகள் நடைபெறும் காலை மற்றும் மாலை வேளைகள் உகந்தவை. அருகிலுள்ள ஆற்றிலிருந்து குளுமையான காற்று எப்போதும் வீசும் வீசுவதால் பரவசமூட்டும் இனிமையான சூழலுடன் இந்த கோயில் வீற்றுள்ளது.
 

800 பக்தர்கள் ஒரே சமயத்தில் அமர்ந்து தியானம் செய்யக்கூடிய அளவில் ஒரு பெரிய தியானக்கூடமும் இங்குள்ளது. கொண்ட ரெட்டி புருஜ்ஜு கோட்டை ஸ்தலத்திற்கு அருகிலேயே அமைந்திருப்பதால்,பயணிகள் மற்றும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு எளிதாக பயணிக்கலாம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...