பாபாவின்
அன்புக்குறிய பக்தரான திரு. நானாசாஹிப் சந்தோர்கர், பிரிட்டீஷ் அரசாங்கத்தில் உயர்ந்த பதவியில்
இருந்தார். சமஸ்கிருத மொழியிலும், இந்து
மத தத்துவங்களிலும்,
கோட்பாடுகளிலும்
ஆழ்ந்த அறிவுடையவராக இருந்தார்.
ஒருமுறை நானாசாஹிப்
சந்தோர்கருக்கு முதுகுப்புறம் ஏற்பட்ட ஒரு கட்டியின் காரணமாக மிகவும் கஷ்டப்பட்டார்.
மருத்துவர்கள், அறுவை
சிகிச்சை செய்வதைத்தவிர
குணப்படுத்துவதற்கு வேறு வழியில்லை என்று கூறி விட்டனர். நானாசாஹிப்பும் வேறு வழியின்றி அறுவை
சிகிச்சைக்கு சம்மதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில்
நானாசாஹிப் பாபாவை
பிரார்த்தித்துக்கொண்டே இருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள்
திடீரென பலமான காற்று அடித்தது. அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் மேல்தளத்தின் ஓடுகள் மளமளவென்று
சரியத்தொடங்கின. அதில் உடைந்த ஓடு ஒன்றின் கூர்மையான பகுதி சரியாக,
(முதுகில் கட்டி
இருந்ததால்) குப்புறப்படுத்துக்
கொண்டிருந்த நானாசாஹிப்பின் முதுகுக்கட்டியின் மீது சரக்கென்று விழுந்து குத்தி கட்டியை
சிதைத்தது. நானாசாஹிப் வலியால் துடித்தார். மருத்துவர்கள்கள் ஓடி
வந்தார்கள். கட்டி உடைந்து ரத்தமும், சீழும் வெளியேறின.
டாக்டர்கள் உடனடியாக
நானாவை சோதித்தார்கள். மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
தலைமை மருத்துவர், “இது
ஒரு மருத்துவ அற்புதம்.
இனி அறுவை சிகிச்சையே தேவையில்லை” என்றார்.
அத்தனை அற்புதமாக ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தது. ஏழெட்டு டாக்டர்கள் சேர்ந்து
உத்திரவாதம் தராமல்
செய்வதாக இருந்த அறுவை சிகிச்சையை, உத்திரத்திலிருந்து
விழுந்த ஒரு ஓடு
செய்துவிட்டது! கட்டியிலிருந்து வெளிவந்த சீழ், ரத்தம் ஆகியவற்றைத் துடைத்து
சுத்தம் செய்து மருந்து வைத்து, கட்டுப்போடப்பட்டது.
சில நாட்கள்
சென்றன. நானா சாஹேப் பூரண குணமடைந்ததும் பாபாவின் தரிசனத்திற்காக ஷீர்டிக்குச்
சென்றார். அவரைக் கண்டதும் பாபா அவரைத் தன்னருகில் அழைத்து, பலமாக சிரித்துக்கொண்டே தன் ஆட்காட்டி
விரலை நானா சாஹேப் முன்னால் நீட்டினார். ஒன்றும் புரியாமல்
பார்த்தார் நானா. பாபா புன்னகைத்தார். "என்ன நானா, என்னிடம் நீ சொல்லாவிட்டால் எனக்குத்
தெரிமல் போய்விடுமா என்ன? நான்தான்
இதோ என் ஆட்காட்டிவிரலால் கூரையிலிருந்து ஓட்டினைத் தள்ளி, உனக்கு அறுவை சிகிச்சை செய்ததேன்!" என்று
புன்னகைத்தார் பாபா. பரவசத்தில் நெகிழ்ந்து கண்ணீர்மல்க பாபாவின்
பாதங்களில் வீழ்ந்தார் நானா சாஹேப்.
உங்களுக்கு என்ன
பிரச்சனை இருந்தாலும் பாபாவை பிராத்தனை செய்யுங்கள். நீங்கள் பிராத்தனை செய்யாவிட்டாலும் பரவாயில்லை,
பாபா உங்களை
கவனித்துக் கொண்டுதான்
இருக்கிறார், உங்கள்
மேல் அக்கறையுடன்தான் இருக்கிறார் என்பதை மட்டுமாவது நம்புங்கள்.உளமார
நம்புங்கள். அப்புறம் பாருங்கள், உங்கள் வாழ்வில்
நடக்கும் அற்புதங்களை! நம்பவே முடியாத ஆச்சர்யங்களை. ஆமாம் அதுதான் பாபா.
“ஒருவன் என் நாமத்தை
அன்புடன் உச்சரிப்பானாகில், அவனுடைய
ஆசைகளைப் பூர்த்தி செய்து, அவனுடைய
பக்தியை அதிகப் படுத்துவேன். என் வாழ்க்கையையும் செயல்களையும்
ஊக்கமுடன் இசையாக பாடுவானாயின், அவனுக்கு முன்னும்
பின்னும், எல்லா
திக்குகளிலும் சூழ்ந்திருப்பேன். சாவின் வாயிலிருந்து என் அடியவர்களை வெளியே
இழுத்துவிடுவேன் “
“யார் என்னிடமே
ஆர்வமுள்ளவர்களாகவும்,என்னையே
தியானிப்பவர்களாகவும்,என்னையே அடையத்தக்க
குறிக்கோளாகவும் கொண்டிருப்பார்களோ அவர்களின் யோகச் ஷேமங்களை
நானே ஏற்றுக்
கொள்கிறேன்.”
பகவான் ஷீர்டி சாய்பாபா
பகவான் ஷீர்டி சாய்பாபா
அனந்தகோடி ப்ரம்மாண்ட
நாயகா ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரம்மோ ஸ்ரீஸச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹராஜ் கீ
..... ஜெய்
No comments:
Post a Comment