பல காட்சி தரும் பாபா!

டாக்டர் கே.பி.கவன்கர் தன் குழந்தை பருவம் முதலாகவே மிகப்பெரிய சாய் பாபா பக்தராவார். பாபாவின் பக்தர்கள் பாபாவின் புகைப்படத்தை கோரியது பற்றி அவர் அவருடைய புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளார். மிகுந்த தூண்டலுக்கு பின்னர், தன் காலடிகளை மட்டும் புகைப்படம் எடுத்துக் கொள்ள பாபா சம்மதித்தார். ஆனால் அவரின் அனுமதியை சாதகமாக எடுத்துக் கொண்டவர்கள் அவருடைய முழுப்படத்தையும் எடுத்து விட்டனர். ஆனால் அந்த ஃபிலிமை கழுவிய போது, சாய் பாபாவின் உருவத்திற்கு பதிலாக புகைப்படமாக எடுத்தவரின் சொந்த குருவின் படமே இருந்துள்ளது. சாய் பாபாவின் பார்வையில் அனைத்து படைப்புகளுமே ஒன்றாகவே இருந்தது. ஜாதி, சமயம் மற்றும் மதத்தின் பேரில் அவர் யாரையும் பிரித்து பார்த்ததில்லை. அவரை பொறுத்த வரை, விலங்குகள் கூட மனிதர்களின் அளவிலான மதிப்பைப் பெற்றிருந்தது. பக்தர்களிடம் இருந்து பிரசாதங்களைப் பெறுவதற்காக அவர் அடிக்கடி விலங்குகளின் வடிவில் காட்சி தருவார்.


Powered by Blogger.