Tuesday, May 31, 2016

கட்டிலைச் சுற்றிவந்தார்

1930 ம் ஆண்டு டாக்டர் குஸ்தம்ஜி என்பவர் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மும்பை பார்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். டாக்டர்கள் அவர் குணமடைவார் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். மயக்க நிலையில் இருந்த டாக்டர் ருஸ்தம்ஜியின் முன்பு ஒரு பக்கீர் தோன்றி என்னைத் தெரியுமா? என்று கேட்டார். தெரியாது என்று பதிலளித்தார் ருஸ்தம்ஜி.
முதலில் உன் உடல் நிலை தேறட்டும், அதன் பிறகு என்னைத் தெரியவரும் என்று கூறிய பக்கீர்,ஒருமுறை ருஸ்தம்ஜியின் கட்டிலை சுற்றி வந்து பிறகு மறைந்துவிட்டார். சற்று நேரத்தில் அவர் கண் விழித்துவிட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ருஸ்தம்ஜி பிழைத்துக்கொண்டதையும் உடல்நிலை நல்ல முறையில் இருப்பதையும் அறிந்து வியந்தனர். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ருஸ்தம்ஜி, தன்னை ஆசிர்வதித்த பக்கீரைக்காண ஏங்கினார், ஆனால் முடியவில்லை.
ஒருநாள் அவர் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தபோது பக்கத்தில் அமர்ந்து ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்த நபரின் கையிலிருந்த புத்தகத்தில் தான் பார்த்த பக்கீர் படம் இருப்பதை அறிந்து இவர்தான் தன்னை காப்பாற்றினார் என சந்தோஷப்பட்டார்.
அதன் பிறகு சாயி பாபாவின் புத்தகத்தை வாங்கிப் படித்தார். 1949 ம் ஆண்டு சீரடி சமஸ்தானத்தின் மருத்துவராக நியமிக்கப்பட்டார்.
ஒருமுறை இவரது மனைவி கண் வலியால் பாதிக்கப்பட்டபோது, டாக்டர்கள் எத்தகைய சிகிச்சை அளிப்பது எனத் திகைத்தார்கள். ருஸ்தம்ஜி தனது மனைவியை சீரடிக்கு அழைத்துவந்து பாபாவின் சமாதியை தினமும் சுற்றச் செய்தார்.
தனது கண்கள் குணமடைந்துவிட்டால், பாபா பல்லக்குக்கு அழகிய வேலைப்பாடு அமைந்த ஒரு துணியை அளிப்பதாக டாக்டர் மனைவி வேண்டுதல் வைத்தார். படிப்படியாக நோய் குணமடைந்துவிட்டது.

பரத்வாஜ் சுவாமிகள் எழுதிய சாயியின் திருவிளையாடல்கள் புத்தகம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...