Saturday, May 21, 2016

சீரடியில் பல்லக்கு ஊர்வலம்



சாயி பக்தியில் பாமரர்களுக்காகப் புதிய அத்தியாயத்தை உருவாக்கி அனைவர் மனதிலும் நம்பிக்கை, பொறுமை என்ற தாரக மந்திரத்தை விதைத்து பக்திப்பயிர் விளைவிப்பவர் நமது அன்புக்குரிய குருஜி ஸ்ரீ சாயி வரதராஜன். இவருடைய பிரார்த்தனையால் பலன் பெற்றவர்கள், ஆன்மிக முன்னேற்றம் அடைந்த வர்கள், அவர்களின் ஜென்ம தின விழா பல்லக்குத் திருவிழாவாக சாயி பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருவதை அறிந்திருப்பீர்கள்.
இந்த ஆண்டும் இவ்விழா மே மாதம் 23--அன்று சீரடியில் சிறப்பாக நடைபெற உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பல்லக்கு ஊர்வலத்தில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். பக்தர்களுக்காகக் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது.
அன்றைய தினம் விழாவில் கலந்துகொள்ள இயலாத பக்தர்கள் தங்கள் இறைவனுக்கும் குருவுக்கும் நன்றி செலுத்தும் விதமாக ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.
விழாக்குழுவின் தலைவராக சாயி வீரமணி, செயலாளர்களாக சாயி ஸ்ரீதரன், சாயி மணி வண்ணன், சாயி செல்லதுரை ஆகியோர் செயல்படுவார்கள். தொடர்புக்கு பிரார்த்தனை மையத்தை அணுகவும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...