Skip to main content

அழியாத பரம்பொருள்

பாபா! நீங்கள் சென்ற பிறகு எங்களின் கதி என்ன? யாரைப் பற்றுக் கோடாகக் கொண்டு நாங்கள் வாழ்க்கை நடத்துவோம்?” என்று ஓர் அன்பர் வெளிப்படையாகவே ஒருநாள் அவரிடம் கேட்டார்.

“”
நான் என் உடலைவிட்டுப் போனாலும் உங்கள் அனைவரையும் காத்து வருவேன். நீங்கள் எப்போது அழைத்தாலும் உங்களைக் காப்பாற்ற ஓடோடி வருவேன். சிறிது காலத்திற்குத்தான் நான் மேலே செல்கிறேன். மறுபடியும் உங்களிடம் கட்டாயம் வருவேன். என் அன்பர்களைவிட்டு நான் இருக்க இயலாது. நான் மறைந்தாலும் என் அருள் இயக்கத்தால் இந்தப் பிரதேசம் முழுவதும் சுறுசுறுப்படையும். அதை நீங்கள் பார்த்து மகிழத்தான் போகிறீர்கள்!” என்று பாபா உறுதிபடக் கூறினார். இதை அவர் ஒரு வாக்குறுதிபோலவே தம் அடியவர்களிடம் தெரிவித்தார். அடியவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இவ்விதமெல்லாம் உறுதியளித்து பாபா மெல்ல மெல்லத் தம் அடியவர்களைத் தமது மறைவுக்குத் தயார் செய்தார். 1918 அக்டோபர் பதினைந்தாம் தேதி. அன்று விஜயதசமி நாள். அவர் இயற்கைப் பெருவெளியில் கலக்க நினைத்த நாள்

எல்லாரையும் சீக்கிரம் போய்ச் சாப்பிடுங்கள் என்று சொன்னார் பாபா. தம் பக்தையான லட்சுமியை மட்டும் இருக்கச் சொன்னார். தம் தலையணை அடியிலிலிருந்து, தாம் வைத்திருந்த ஒன்பது நாணயங்களை எடுத்தார். அவற்றை தம் உள்ளங்கையில் வைத்தவாறு, “”இவை ஒன்பது விதமான கடவுள் ஈடுபாட்டைக் குறிப்பவை.  இவற்றை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்!’ என்று சொல்லிக் கனிவோடு லட்சுமியிடம் கொடுத்தார். லட்சுமி ஒரு விம்மலுடன் அந்த நாணயங்களை வாங்கிக் கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவளுக்கு பாபா விடைபெறப் போகிறார் என்ற உண்மை புரிந்துவிட்டது. பாபாவின் தலை சாய்ந்தது

பாபாவின் பொன்னுடல் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்துக்களும் முஸ்லிம்களுமான ஆயிரக்கணக்கான அடியவர்கள் பாபாவின் பொன்னுடலுக்கு வந்து அஞ்சலி செலுத்திக் கதறினார்கள். சாயிபாபாவின் பொன்னுடல் பூட்டிவாடா என்ற இடத்தில் உள்ள திருக்கோவிலிலில் அடக்கம் செய்யப்பட்டது. ஓம் என்ற பிரணவ மந்திரம் ஒருபுறம் ஒலிக்க,அல்லாஹூ என்ற இஸ்லாமியர்களின் முழக்கம் ஒருபுறம் ஒலிக்க, பாபா மண்ணில் புதையுண்டார்

நீ என்னைப் பார்த்தால் நான் உன்னைப் பார்ப்பேன்!’ என்பதல்லவா பாபாவின் அருளுரை? இப்போதும் தன்னைப் பார்க்கும் அடியவர்கள் துயரையெல்லாம் துடைப்பவராக பாபா தொடர்ந்து அருளாட்சி செய்துவருகிறார். என்றும் வாழும் சித்தர்களுக்கு அழிவேது? அவர்கள் அழியாத பரம்பொருளின் வடிவமல்லவா?

ஓம் சாயி!                                                 ஸ்ரீ சாயி!                                    ஜெய ஜெய சாயி!

Popular posts from this blog

தடையை வெல்லும் தாரக மந்திரம்

அன்பான சாயியின் பிள்ளையே! தடைகள்என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிறவிசயம்.எனவே தடை வரும்போது தைரியத்தை இழந்து விடாமல், அடுத்த இலக்கைநோக்கிப் பாய்வதற்குத்தயாராக இருக்கவேண்டும். அதுவும் சாயி பக்தர்கள் என்பவர்கள் சாமான்யமானாவர்கள் கிடையாது. அவர்கள் புண்ணியம் மிகுந்தவர்கள். பாவங்களும், கர்ம கெடுவினையும்தீர்ந்த ஒருவன்தான் சாயி வழிபாட்டை எய்த முடியும் என்று பாபாவே உனக்குச் சொல்லியிருக்கிறார்.இப்போது நீ செய்யவேண்டியதெல்லாம், சோர்வை நீக்கி புத்துணர்ச்சி பெறவேண்டியதுதான். மனிதர்கள் போடும் தடைகள் மலைகள் அல்ல,
தாண்டுவதற்குச் சிரமமாக இருக்கும் என்று மலைத்து நிற்பதற்கு. அவையெல்லாம் மடை திறந்த வெள்ளத்தின் முன்னால் கையால் அள்ளிப் போடப்பட்டுள்ள மணல் குவியலைப் போன்றவை. உன்னை அவைதடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை தைரியமாக நினைத்துக் கொள்.. சிந்தனையை ஒருமுகப் படுத்துதைரியத்தை வரவழை.. கோழைகளைப் போலகூப்பாடு போடாமல், செயலாற்றத் தயாராகு. தடை தளர்ந்து போகும்.
பாபா என்ன சொன்னார் தெரியுமா? நீ தண்டால் எடுக்க ஆரம்பி. (கடுமையானப் பயிற்சி) பாலைப்பற்றிய கவலை (பலன் பற்றிய கவலை)உனக்குவேண்டா.…

சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்

சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்


எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்ள சிறந்த ஒன்பது வழிகளை இங்கே பார்க்கலாம்:
1. சாயி சத்சரித்திரம் புத்தகத்தில் (அது என்ன மொழி புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை), அதனை ஒரு அழகான துணியினால் மடித்து, பாபா புகைப்படம் அல்லது சிலை அருகே (வீட்டில் என்ன வைத்து வழிபடுகிறோமோ அதன் முன்னர்) மிகப் புனிதமாக கருதி வைத்து வழிபட வேண்டும் .
2. வீட்டிலோ அல்லது வேறு எங்கு இருந்தாலும், தினசரி இரவு எப்போதும் தூங்க செல்லும் முன், ஒவ்வொரு இரவும் சாயி சத்சரித புத்தகத்தின் ஒரு சில பக்கங்களை படிக்க வேண்டும் . ஒவ்வொரு பக்தரும் தூங்கச் செல்லும் முன் கடைசியாக சிந்தனை என பாபாவினை மனதில் வைக்க முயற்சிக்க வேண்டும் .
3. ஏதேனும் சங்கடம் ஏற்படின், ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது போல் , ஒரு வாரம் தீவிரமாக வாசிக்க வேண்டும் முடிந்தவரை வாசிப்பு ஒரு வியாழக்கிழமை அல்லது வேறு சில சிறப்பு நாட்களில் தொடங்க வேண்டும்.சிறப்பு நாட்கள் என்றால் ராமநவமி , தசரா , குருபூர்ணிமா , ஜன்மாஷ்டமி , மஹாசிவராத்திரி , நவராத்திரி , முதலியன ஆக…

தடையை வெல்லும் தாரக மந்திரம்

அன்பான சாயியின் பிள்ளையே! தடைகள்என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்குஅழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற விசயம்.எனவே தடை வரும்போது தைரியத்தை இழந்துவிடாமல், அடுத்த இலக்கை நோக்கிப் பாய்வதற்குத்தயாராக இருக்கவேண்டும். அதுவும் சாயி பக்தர்கள் என்பவர்கள் சாமான்யமானவர்கள் கிடையாது. அவர்கள் புண்ணியம்மிகுந்தவர்கள். பாவங்களும், கர்ம கெடுவினையும்தீர்ந்த ஒருவன்தான் சாயி வழிபாட்டை எய்த முடியும்என்று பாபாவே உனக்குச் சொல்லியிருக்கிறார். இப்போது நீ செய்யவேண்டியதெல்லாம்,சோர்வை நீக்கி புத்துணர்ச்சி பெறவேண்டியதுதான்.