மகாராஷ்டிராவில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் சீரடியில்
இப்போது கூட்டம் எப்படியிருக்கிறது?
ஜே.சி. பிரபாகர், மதுரை - 2
சாயி புத்ரன் பதில்கள்
ரொம்ப அதிகமாகத்தான் இருக்கிறது. பாபா திருமுன்னர் நின்று
வணங்குவோரை சலோ சலோ என்று இழுத்துவிடும்
பணியாளர்கள் தற்போது வெளிப்படையாகவே பக்தர்களிடம் காசு வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். காசு கொடுத்தால் பாபாவை தரிசிக்கவிடுவதும், தராவிட்டால் சலோ சலோ என இழுத்து விடுவதுமாக இருக்கிறார்கள். கூட்டத்திற்கு இது
ஒரு உதாரணம்தான். இது போன்ற பல கூட்டம் அங்கும்
பெருகிவிட்டது. இங்கிருந்து போவோர் காசு செலவழிக்கப் பார்ப்பதும், போய் செட்டிலானவர்கள் காசு
பார்க்க நினைப்பதும் பரவலாக நடந்துவருவது அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment