சிவன் சொத்து குலநாசம் என்கிறார்கள். பாபாவின் சொத்து எப்படி?
பி.என். சீனிவாசன், காஞ்சிபுரம்
சாயி புத்ரன் பதில்கள்
சீரடியில் ராதாகிருஷ்ண மாயி விலை மிக்க நகைகள் பொருட்கள் போன்றவற்றைச்சேமித்து வைத்திருந்தார்.
இவற்றைக்கொண்டுதான் அவர் சீரடியை ஒரு சமஸ்தானம்
ஆக்கவேண்டும் என விரும்பியிருந்தார். எதிர்பாராத முறையில் அவர் மரணம் அடைந்தபிறகு, அவரது வீட்டில் இருந்த பொருட்களை
அரசாங்கம் கைப்பற்றி ஓர் அரசு அலுவலகத்தில்
வைத்தது. இரண்டு சூட்கேஸ் நிறைய பொருட்களைத்
திருடி யாரோ அதைப் புதைத்து
வைத்தார்கள்.
விஷயத்தை அறிந்த பாபா, அல்லாவே எனது பாதுகாவலர். யாரேனும் எனது பொருட்களை அபகரிக்க முயன்றாலோ, திருட முயன்றாலோ அவை அனைத்தும் வெறும்
கரியாகிப் போகும் என்றார்.
(இவ்வாறு திருடப்பட்ட பொருள் கரியாக மாறியதா என்பது பற்றிய விவரம் கிடைக்கவில்லை)
No comments:
Post a Comment