சீரடியில் பாபாவுக்கு அபிஷேகம் கிடையாது என்பது
உங்களுக்குத்தெரியும். அபிஷேகம் நடந்தகாலத்தில்,
ஒருநாள் பூஜாரி தவறுதலாக சொம்பை பாபாவின்
காலில் போட்டு விட்டார். இதைப்பற்றி
அவர் பெரிதாக நினைக்கவில்லை.
மறுநாள் அவருக்குக்கால் வலிக்க ஆரமபித்து டாக்டரிடமெல்லாம் போய் வந்தார். என்ன செய்தும் குணமாவதாகத்தெரியவில்லை.
பாபாவிடம் பிரார்த்தனை செய்தார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய பாபா,
உனக்கு வலிக்கிறது
என இவ்வளவு சிரத்தையாக செயல்படுகிறாயே, இப்படித்தானே எனக்கும் வலித்திருக்கும்? அதை ஏன் கண்டுகொள்ளவில்லை எனக் கேட்டார்.
பாபாவின் இந்தக்கேள்வியை எதிர்பார்த்திராத அவர், பாபா விக்கிரகமாக இல்லை உயிருடன் இருக்கிறார் என்பதைப்புரிந்துகொண்டு அதன்பிறகு பயபக்தியுடன் பூஜை செய்துவந்தார்.
No comments:
Post a Comment