அலை
பாய்கிற மனதில் எப்படி இறைவன்
இருக்க முடியும்?
( பி.
சீதாலட்சுமி, செங்கல்பட்டு)
அமைதியான
நதியை விட, அலைபாய்கிற கடல்தான் அனைத்தையும்
விடப் பெரியதாகவும், தன்னில் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும்
இருக்கிறது. எனவே, அலைபாய்கிற மனம் இருக்கிறது என்பதற்காக சோர்ந்து விடவேண்டாம்.
அலை
என்பது உலக வாழ்க்கை. இதில்
உழலும் கப்பல் போன்றது உடம்பு. இந்த
உடம்புக்குள் இறைவன் இருக்கிறான். ஆகவே, கப்பலை அலைக்கு ஏற்றவாறு
இயக்கும் மாலுமியைப் போல மெதுவாகவும், சாதுர்யமாகவும் நடத்திச் செல்லப்பழக வேண்டும். இந்தப் பழக்கம் ஏற்படுவதற்கு,
இறைவனுடைய நினைப்பில் இருந்து கொண்டு உலகக் கடமைகளைச்
செய்ய வேண்டும். அப்போது உங்கள் கேள்விக்கு
விடைகிடைக்கும்.
No comments:
Post a Comment