Wednesday, May 4, 2016

யார் முதலில்?

இறைவன் ஆணை முதலில் படைத்தானா? பெண்ணை முதலில் படைத்தானா?
(வி;. மகேஷ், பெங்களூர் 56)
ஆதாம் ஏவாள் கதை படித்திருப்பீர்கள். இறைவன் ஆணைத்தான் முதலில் படைத்தான். பெண்ணுக்கு அறிவை முதலில் கொடுத்தான்.
மனிதனுக்கு எது வாழ்க்கையைக் கற்றுத் தருகிறது? எப்படி எனக் கூறமுடியுமா?
(எஸ். பிரீத்தி, சென்னை 43)
போராட்டமே வாழ்க்கையைக் கற்றுத் தருகிறது. இந்த உலகில் வாழ நினைக்கும் எந்த ஒரு உயிரும் தன்னைக் காத்துக்கொள்ள, நிலைப்படுத்திக்கொள்ள போராடுகிறது. கொல்லும் உயிரினமாகட்டும், கொல்லப்படும் உயிரினமாகட்டும் போராட்டத்தை மேற்கொள்கிறது. வென்றவர் வாழ்வர், தோற்றவர் மாள்வர் என்பதே உலகின் நியதியாக தொன்று தொட்டு இருந்துவருகிறது.
இப்போது பிறரால் நமக்குப் போராட்டம் குறைவு. நமது செயல்களாலும், எண்ணங்களின் விளைவுகளாலும் ஏற்படுகிற விளைவுகள் தோற்றுவிக்கிற போராட்டங்களே அதிகம். எதை அத்தியாவசியம் என நினைக்கிறோமோ, எதை சாத்தியப்படுத்திக் கொள்ள முயல்கிறோமோ அதற்காக மேற்கொள்கிற முயற்சிகூட ஒரு போராட்டம்தான்.
பிறவியில் ஆரம்பித்து, இறப்பில் முடிகிற ஒவ்வொரு நிகழ்வும் போராட்டத்தின் வடிவங்களாகும். கஷ்டம் பற்றி கலங்காமல், விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல் போராடத் தொடங்கினால் வாழ்க்கையை வெல்லலாம். வாழ்வையும் கற்கலாம்.


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...