Friday, May 6, 2016

பசு-பதி-பாசம்

பசு-பதி- பாசம் இந்த மூன்று நிலைக்கு ஒரு புதுமையான விளக்கம் கூறுங்களேன்?
( ஜீ. கமல், சென்னை 52)
பசு - சாயி பாபாவை வழிபடும் வழியை அறியாத நிலையில் இருப்பவர். சதா துன்பத்திலும், தோல்வியிலும் உழன்று அழுது புலம்புபவர்.
பதி - பதி என்றால் தலைவன். மற்றவர்களை விட மேலான திறமை இருப்பவனே தலைவன் ஆகும். தகுதியைப் பெறுவதுபோல, துன்பம், தோல்வி போன்றவை இருந்தாலும் பாபா காப்பாற்றுவார் என்ற தெளிவை அடைந்து உறுதியோடு அவரைப் பின்பற்றுகிற நிலைமைக்கு உயர்கிறவன் பதி.
பாசம் - தைரியத்தோடும், உறுதியோடும் இறைவனை அறியும் முயற்சியில் ஈடுபட்டு, அடுத்தடுத்து தோல்வி கண்டாலும் தனது இலக்கின் மீது விருப்பம் வைத்து ஆன்ம ஞானம் அடைகிற நிலை. இந்த நிலைக்கு வந்துவிட்டால் நமது ஆதார சக்திகள் திறந்துகொள்ளும். அதன் பிறகு நமது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இதை உணர்ந்துகொள்வது உங்கள் அறிவையும், தெளிவையும் பொறுத்தது.
சாயி புத்ரன் பதில்கள்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...