Monday, May 23, 2016

சாயி புத்ரன் பதில்கள்

உங்களுடன் ஆரம்பத்தில் வந்த பலரை நீங்கள் தவிர்த்துவிட்டதாகக் கேள்விப்பட்டோம். அவர்களுடன் தொடர்பில் இருப்பதைத்தவிர்ப்பதாகவும் கேள்விப் பட்டோம். ஏன் இப்படி? இதனால் பக்தர்கள் கலக்கமடையமாட்டார்களா?
மீனாட்சிசுந்தரம், சென்னை - 5

சாயி புத்ரன் பதில்கள்
பக்தர் வீட்டில் தங்கியிருந்த ஒரு மகானுக்கு நள்ளிரவு கடந்தும் இறை நினைவால் உறக்கம் வரவில்லை. அப்போது திருடர் கூட்டம் ஒன்று வந்து அந்த வீட்டில் திருட முயற்சி செய்துகொண்டிருந்தது. அவர்களிடம் சென்று நானும் ஒரு திருடன் தான் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களோடு இணைந்துகொண்ட அந்த மகான், திருடர்கள் விலைமிக்கப் பொருட்களைத்திருடுவதைத் தடுக்க நினைத்தார். அவர்கள் விலைமிக்கப் பொருட்களை திருடிக்கொண்டிருக்கும்போது, தானும் அவர்களுடன் சென்று பொருளை தேடுவதைப் போலப் பார்த்தார்.
கண்ணனின் விக்கிரகம் ஒன்று இருப்பதைக்கண்டு, நண்பா, நான் உன் வீட்டிற்கு வந்திருக்கிறேன், என்னுடன் விளையாடாமல் தூங்கிக்கொண்டிருக்கிறாயா? எழுந்திரு என்று கேட்டார்.
விக்ரகம் பேசவில்லை. உடனடியாக அந்த மகான், நான் கெஞ்சிக் கொண்டே இருக்கிறேன், நீ எழுந்திருக்க மறுக்கிறாயா, இரு இரு உன்னை எப்படி எழுப்புவது என்று எனக்குத் தெரியும் என்று கூறிக்கொண்டே பக்கத்திலிருந்த கண்டாமணியை எடுத்து டாண் டாண் என சத்தமாக ஆட்ட ஆரம்பித்துவிட்டார்.
எதிர்பாராத இந்த சத்தம் கேட்டுத் திகைத்த திருடர்கள் ஓடிப் போனார்கள். நடந்ததை நேரில் பார்த்த வீட்டுக்காரர்களோ நிம்மதி அடைந்தார்கள்.
மகானின் செயல்பாடு பகவானை எழுப்புவதா? வீட்டுக்காரர்களை எழுப்புவதா? திருடர்களை விரட்டுவதா? என்னுடைய செயல்பாடும் இப்படிப்பட்டதுதான். நீங்கள் வீட்டுக்காரர்களாக இருங்கள், திருடர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...