Monday, May 30, 2016

SAI BABA IS STILL ALIVE

அன்பு நண்பர்களே.
சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் மூலம் JAYA WAHI என்ற பெண்மணி எழுதிய SAI BABA IS STILL ALIVE என்ற புத்தகம் கிடைத்தது. பாபா தான் உயிரோடிருக்கும்போது எப்படி தன் அடியவர்களைக் காப்பாற்றி வந்தாரோ, அதேவிதமாக தான் சமாதி அடைந்த பின்னரும், இன்றளவும் அவர்களின் நலனைப் பேணி வருகிறார் என்பது நாம் உணர்ந்து, அறிந்ததே.
மிக சமீப காலங்களில் நடைபெற்றுவரும் புல்லரிக்க வைக்கும் அற்புதங்கள் சிலவற்றை மிக அழகாக இப்புத்தகத்தில் JAYA WAHI பதிவு செய்துள்ளார்.
இப்புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த போது, தமிழ் எழுத்தாளர் திருமதி. சிவசங்கரி அவர்கள் இந்த புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்கள் என அறிந்து அதற்காக அலைந்தேன். என் நண்பர்கள் சிலரும் அதற்காக முயற்சி எடுத்தனர்.
26 - ம் தேதி என் பிறந்த நாள் அன்று, நானும் என் மனைவியும் மயிலாப்பூர் பாபா கோவிலுக்கு சென்றிருந்தோம். தரிசனத்துக்குப் பிறகு என் மனைவி "சிவசங்கரியின் புத்தகம் இங்கு கிடைக்கிறதா, கேளுங்களேன்" என்றாள். நான் விசாரித்தேன். அலுவலகத்தில் இருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர். ஏனென்றால், அப்போதுதான் அந்த புத்தகம் வந்து, பேக்கிங்கைப் பிரித்துக் கொண்டிருந்தனர். முதல் புத்தகத்தை வாங்கி பாபாவின் பாதத்தில் வைத்துப் பெற்றுக்கொண்டேன்.
என் பிறந்த நாளன்று உன் சன்னதியில் கொடுக்க நினைத்தாயோ என் சாயி பகவானே..... பாபாவின் அற்புதங்களுக்கு அளவேது.
புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்துள்ளேன். கீழே வைக்க மனதில்லை. அற்புதம். வேறு வார்த்தை கிடைக்கவில்லை.
அனந்தகோடி ப்ரம்மாண்ட நாயகா ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரம்மோ ஸ்ரீஸச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹராஜ் கீ ..... ஜெய்

SAI BABA IS STILL ALIVE (Tamil)
By JAYA WAHI. Translated By
சிவசங்கரி
Published, Marketed and Distributed by
TIMES GROUP BOOKS
A division of Bennett Coleman & Co Ltd.
Times Annexe, 9-10, Bagadur Shah Zafar Marg.
NEW DELHI -110 002
www.tgb.indiatimes.com
விலை.. ரூபாய் 225

Sethuram Krishnamurthy  அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...