Thursday, May 12, 2016

மந்திரவாதிகளை நாடிப் போக வேண்டாம்!


அகமத் நகரிலிருந்து பத்து மைல் தொலைவில் இருந்த மீரஜ் காம் என்ற இடத்தில் வசித்து வந்த குசபாவ் இளவயதிலேயே மந்திர வித்தையை கற்றுத் தேர்ந்தவர்.
இவரது குரு இமய மலைக்குப் போகிற போது, எனது மூத்த சகோதரர் சீரடியில் இருக்கிறார், அவரை சந்தித்து அவர் சொல்படி நடந்துகொள் என புத்தி கூறினார்.
குசபாவ் சீரடிக்கு வந்து, 1908ம் ஆண்டு வரை தன்னை நெருங்க பாபா அனுமதிக்க வில்லை. பாபாவை நெருங்க முயன்றபோதெல்லாம்,  முதலில் உன் மாய வித்தைகளை நிறுத்து, அதன் பின் இங்கே வா!”  என்று கூறி விடுவார் பாபா.
பல தீய ஆவிகளை பாபா விரட்டினார். ஒரு முறை பர்வானி என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவன் மந்திர வித்தைக்கு இலக்காகியிருந்தான். அவனுக்கு உணவு முடிகளைப் போல தெரிந்தது, சாணி போல நாற்றம் அடித்தது. அடிக்கடி அவனது உடைகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது. பூஜைகள் செய்து பார்த்தான், மந்திர வாதிகளை நாடினான். எதுவுமே பலனளிக்கவில்லை.
பாபாவிடம் ஓடிவந்தான். பாபா ஆசீர்வதித்தார். உடனே மந்திரக்கட்டு விலகியது. பாபாவிடம் மந்திரவாதிகள் செல்லமுடியாது. அவர்களை தன் முன்னிலையில் அனுமதிக்கவே மாட்டார். மந்திரவாதிகளை நாடுவோரையும் அவர் அனுமதிக்க மாட்டார். தீவிரமாக சாயியை உபாசித்து, அவரது நாமத்தை உச்சரிக்கும் செயலை மட்டும் செய்யுங்கள். வேறு எந்த விக்ஷயத்திலும் நாட்டம் செலுத்தாமல் பாபாவின் பாதங்களின் மேலே கண்களை வைத்திருங்கள்.
இப்படி இருந்தால் உங்களுக்கு மாயவித்தைகள், மந்திர தந்திரங்கள், அருள் வாக்குகள் போன்ற எதுவும் தேவைப்படாமல் நினைத்தது நடக்கும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...