பாபாவின் தேகம் வாழ்ந்த காலம் தொட்டு இன்றுவரை சாயி பக்தர்களின் அனுபவம், சீரடிக்குப் போய் வந்த பிறகு வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம்தான்.
ரத்தன் ஜி சேட் என்ற பக்தர் தாசகணு மகராஜை அணுகியபோது, அவர் சொன்ன வார்த்தை, சீரடிக்குப் போய் வாருங்கள்,
உங்களுடைய
மனவிருப்பம் நிறைவேறும்.
பாபாவை தரிசனம் செய்யுங்கள், அவரது பாதங்களில் வந்தனம் செய்யுங்கள்;
உம்முடைய உள்ளத்து
ஆசைகளை அவரிடம் விளக்கமாகச் சொல்லுங்கள்.
அவர் உங்களை ஆசீர்வாதம் செய்வார். போனால்
உங்களுக்கு சுபம் உண்டாகும். பாபாவின்
வழிமுறைகள் கற்பனைக்கு எட்டாதவை. நீரே
கதி என்று அவரை சரணம் அடையுங்கள்;
நீங்கள் மங்களம் நிறைந்தவராக ஆகிவிடுவீர்கள் என்பதுதான். சத்சரித்திரம் முப்பதாவது அத்தியாயம் 114, 115 ம் வசனங்களைப்
படித்துப்பாருங்கள்.
பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதும் அவர்களுடைய உலகியல் தேவைகளையும் ஆன்மிகத் தேடல்களையும் நிறைவேற்றி வைப்பதுமே பாபாவின்
மனோரதமாக இருந்தது.
அவர், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறிய நிலையில் விருப்பம்
என்று எதுவும் இல்லாதவர்; சுயநலமற்றவர், அகங்காரம் இல்லாததவர், பற்றற்றவர், பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே அவதாரம்
செய்தவர் என்று எழுதப்பட்டிருக்கிறது.
பக்தர்களாகிய உங்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள், தேடல்கள், எதிர்பார்ப்புகள் என இருக்கிறது. உங்கள்
மனதின் ஆசைகள் எத்தனை எத்தனையோ உள்ளன.
ஆனால் பாபாவுக்கு ஒரே ஒரு ஆசைதான்
உள்ளது; அது, உங்களது ஆசைகளை
நிறைவேற்றிவைக்க வேண்டும் என்பது மட்டுமே.
இதற்காகவே அவர் அவதாரம் செய்து வந்தார் என
சத்சரித்திரம் கூறுகிறது.
எல்லோரும் அவரிடம் கேட்கிறார்கள், ஆனால் பெற்றுக்கொள்கிறார்களா என்றால் கிடையாது என்றுதான் சொல்லவேண்டும். ஏன் அப்படி எனக் கேட்கலாம்.
நீங்கள் உங்கள் பிள்ளைக்குத் தருகிற அனைத்தையும் உங்கள்
பக்கத்து வீட்டுப் பிள்ளைக்கு தருவீர்களா, அவர்களுக்காகவே வாழ்வீர்களா?
என உங்களை நீங்களே
கேட்டுப் பாருங்கள்.
எனக்கென்ன தலையெழுத்து? யாரோ பெற்ற பிள்ளைக்காக நான் ஏன் வாழவேண்டும்? எனக்கூறுவீர்கள். அதே சமயம்
உங்கள் பிள்ளை எப்படிப்பட்டவராக
இருந்தாலும் அவருக்காகவே வாழ்வீர்கள், அல்லவா?
இப்படித்தான் பாபாவும். அவருடைய பிள்ளைகளுக்காகத்தான் அவர் பாடுபடுவார்.
யார் அவருடைய உண்மையான பக்தரோ
அவரே அவரது உண்மையான பிள்ளையும்
ஆவார். அவருடைய விருப்பத்தை
நிறைவேற்றுவதே பாபாவின் முழுமையான
விருப்பம் ஆகும்.
நான் என் வாசகர்களுக்குக் கற்பிக்கும்போது, நீங்கள் பாபாவைப் போல
மாறிவிட்டால் பாபா உங்களுக்கு அனைத்தையும் தருவார்
என்று கூறுவேன். அவர் சுயநலம்
இல்லாதவர், பற்று இல்லாதவர், அகங்காரம் இல்லாதவர்,
மற்றவர்களின்
விருப்பங்களை நிறைவேற்றுபவர். அவரைப்போல நீங்கள் மாறவேண்டும்.
அவர் கடவுள், நான் மனிதர். என்னால் எப்படி இது சாத்தியமாகும்? எனக் கேட்கலாம். இப்படி ஆக விரும்பினால் போதும்,
உடனடியாக உங்களுக்குள்
மாற்றத்தைக் கொண்டுவந்து விடுவார். இது கதையல்ல,
சாயி பக்தர்களின் அனுபவம். இந்த அனுபவம் நடைமுறையாக வேண்டும் என்பதுதே அறியவேண்டிய விஷயம்.
பாபா மனதில் இருப்பதாக எண்ணுகிறோம். அப்படியே மனதில் வந்திருப்பார். காலப்போக்கில் உங்கள் வேண்டுதல் அனைத்தையும்
நிறைவேற்றித் தந்துவிட்டு, ஆன்மிகத்தைப் போதித்து நீங்கள் யார் என்பதை
உணர்த்தும்போது, நீங்கள் பாபாவின் அம்சம் என்பதைத்
தெரிந்துகொள்வீர் .
அப்போது எந்த விருப்பமும் உங்களுக்கு இருக்காது. பிரார்த்தனைக்கான தேவையும் இருக்காது, அனைத்தும் தாமாகவே நிறைவேறிக்கொண்டிருக்கும்.
ஆகவே, உங்களது விருப்பம் நிறைவேற, முதலில் பொறுமையாக இருக்க வேண்டும். பாபா பார்த்துக்கொள்வார்
என்ற நம்பிக்கையில் எது
நடந்தாலும் அதை சகித்துக்கொண்டிருக்க வேண்டும்.
சோர்வடைந்துவிடக்கூடாது, தைரியத்தை மனதில் வரவழைத்துக் கொண்டு எதையும் ஒரு கை பார்த்துவிடலாம் என பிரச்சினையை எதிர்கொள்ள
வேண்டும்.
நமது நம்பிக்கையை அசைக்கிற மாதிரியான நிகழ்வுகள் தோன்றும்போதுகூட தடுமாற்றம் அடையாமல்
அவருக்காகக் காத்திருக்கவேண்டும். இப்படியிருந்தால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறிவிடும்.
அதற்கு அடையாளமாகத்தான் அவர் உங்களை சீரடிக்கு அழைப்பது.
அவரது அழைப்பை ஏற்று ஒருமுறை சீரடிக்குப்
போய் வந்துவிட்டால் அனைத்தும் சரியாவதை
உணர்ந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment