சனத்குமார
மகரிஷியின் வேண்டுகோள் படி சிவபெருமான் எளிய தர்ம விதியை
கற்றுத் தந்தார். அதற்கு திரிபூந்த பஸ்ம
தாரண விதி என்று பெயர்.
ஒரு
சிறிய அளவு விபூதியை எடுத்து
அதனுடன் சிறிதளவு தண்ணீரை கட்டை விரலால்
கலந்து இறைவனை தியானித்து விபூதியை நெற்றியின் அருகே எடுத்துச் செல்லவேண்டும். பின்னர் மந்திரத்தை உச்சரித்தவாறு மூன்று கோடுகளை நெற்றியில் இடவேண்டும்.
முதலில்
நடுவிரல், மோதிர விரல்களைக்கொண்டு மேல்
கீழ் இரண்டு கோடுகளை இடமிருந்து வலமாக
இடவேண்டும். பின், கட்டை விரலால் நடுவில்
இடமிருந்து வலமாக கோடிட வேண்டும். அவை
புருவத்தின் எல்லையைத்தாண்டக் கூடாது. அவை எப்போதும்
பயபக்தியுடன் நெற்றியில் அணியப் பட்டிருக்க வேண்டும்.
முதல்
கோடு பிரம்மா. ரிக்வேத அடையாளம். ஓம்
என்னும் பிரணவ மந்திரத்தின் அல்லது
முதல் பகுதியினால் குறிப்பிடப்படும் கிரியா சக்தியினை அது அளிக்கும்.
இரண்டாம்
கோடு விஷ்ணு தேவதா ஆகும். யஜுர்
வேதத்தின் அடையாளமாகும். இது ஓம் என்பதின் இரண்டாம்
பகுதியினை குறிப்பிடும். இச்சா சக்தியினை அளிக்க
வல்லதாகும்.
மூன்றாவது
கோடு, மகேஸ்வரரே ஆகும். சாம வேதத்தின் அடையாளமாகும்.
அது ஓம் என்னும் மூன்றாவது பகுதியினால்
குறிப்பிடப்படுவதாகும். ஞான சக்தியை அளிக்க
வல்லதாகும் இது.
ஒருவரின்
பாவங்களை அழிப்பதில் பஸ்ம தாரணத்திற்கு இணையாக ஏதும் இல்லை
என்று சிவபெருமான் கூறினார். ஆனால் அது முழு
நம்பிக்கையுடனும், பக்தியுடனும்
செய்யப்பட வேண்டும். நெற்றியில் விபூதியும், கழுத்தில் ருத்ராக்க்ஷமும் தரித்திருப்பவனுக்கு வாழ்க்கையில் இம்மையிலும், மறுமையிலும் தேவை என்பதே இருக்காது.
விபூதி
மந்திரம்
த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம்
புஷ்டி
வர்தனம்
உர்வாருகமிவ பந்தநாத்
ம்ருத்யோர்
முக்
ஷீய மாம்ருதாத்
விபூதியின்
மணத்தினை தன் மேலும், மற்ற
எல்லா இடங்களிலும் பரப்புகின்றவரே, உலகியல் வாழ்வையும், ஆத்ம ஞான வாழ்வையும்
எல்லோருக்கும் அளித்து
காத்து ரட்சிப்பவரே! அந்த முக்கண்ணனுடைய பிரபுவே, அவரை நான் தொழுகிறேன்.
சாயி
வீரமணி
No comments:
Post a Comment