சில சமயங்களில் பாபா மிகவும் விளையாட்டுத் தனமான
மனோபாவத்துடன் இருப்பார். அச்சமயங்களில்
பக்தர்களுடன் விளையாடுவார். தாத்யா போன்ற
பக்தரின் தலைப்பாகையை ஒளித்து
வைத்துவிட்டு வேடிக்கைக் காட்டுவார். சில
சமயம் அவரது தலைப்பாகையை அணிந்து கொண்டு
தாத்யா போல அபிநயம் செய்து காட்டுவார். சில சமயம் மகல்சாபதியின் கால்களைப் பிடித்து விடுவார்.
அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தால், இதைப்பற்றி பொருட்படுத்தாதே!
நாம் இருவரும் சமமானவர்கள்தாம். மக்கள் என்னைப் பற்றி உயர்வாக நினைக்கிறார்கள். நான் அப்படிப்பட்டவன் அல்ல என்பார்.
No comments:
Post a Comment