Monday, May 9, 2016

குருவை நம்பு!



எனது நண்பர் ஒருவர், அவரது குருவிடம் அழைத்துச்சென்று இவர் எனது குரு. இவர் மீது நம்பிக்கை வைத்தால் எல்லாம் நடக்கும் எனக் கூறினார். அந்த குருவிடம் சென்றேன். ஆனால் அவர் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. இதனால் தவறு செய்து விட்டோமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது.
ஒருவர் குறிப்பிடும் குருவை நாம் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா? தெளிவு படுத்துங்கள்.
( கே.பி. குணசேகரன், திருச்சி 2)


ஒருவருக்கு குருவாக இருக்கிறவர் மீது இன்னொருவர் பக்தி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. அதாவது ஒருவரது குரு இன்னொருவருக்கு குருவாக இருக்க இயலாது.
சாயி பாபாவை வணங்குகிற எத்தனை பேர் ராகவேந்திரரை ஏற்றுக்கொள்கிறார்கள்? சீரடி சாயி பாபாவை சத்குருவாக ஏற்கிற எத்தனை பேர் புட்டபர்த்தி சாயி பாபாவை ஏற்கிறார்கள்? இது அவர்கள் குற்றமல்ல. பூர்வத்தில் விதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே, குருவை அடையாளம் காணமுடியும். அவர் மேல் பக்தியும் ஏற்படும். இதில் தோக்ஷம் எதுவும் இல்லை. பயப்படவேண்டாம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...