Saturday, May 28, 2016

சாயி சத்சரிதத்திலிருந்து


விஜயதசமி, வங்காள தேசத்தில் துர்க்கா பூஜை முடியும் நாள். விஜயதசமி வடநாட்டிலும் எல்லாருக்கும் பண்டிகை நன்னாள். 1916 ஆம் ஆண்டு (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு), இதே விஜயதசமி நாளன்று, சாயங்கால நேரத்தில், பிரதோஷ காலத்தில், பின்னர் நடக்கப்போவதை சூசகமாகத் தெரிவித்தார் பாபா. அந்த அபூர்வமான லீலையை எவ்வாறு செய்தார் என்பதை இப்பொழுது சொல்கிறேன்; கேட்பவர்கள் வியப்படைவீர்கள். மேலும், எல்லாரும் ஸமர்த்த ஸாயீயின், திட்டமிட்டுச் செயலாற்றும் சாமர்த்தியத்தையும் அறிந்துகொள்வீர்கள்.
1916 ஆம் ஆண்டு நவராத்திரிப் பண்டிகை சமயத்தில், சாயங்கால வேளையில், அவருடைய வழக்கமான சுற்றுலாவை முடித்தபின் ஓர் அற்புதமான லீலை பாபாவிடமிருந்து வெளிப்பட்டது.
1. சூரியன் தெற்கு நோக்கிச் சஞ்சரிப்பதுபோல் தோன்றும் ஆறு மாத காலம்.
2. முஹம்மது நபியின் மகள் பாத்திமாவின் இரண்டாவது மகன் இமாம் ஹுசேன், தொழுகை செய்துகொண்டிருந்தபோது யாஜித்பின் மௌவியாவின் (விரோதி) சேனையால் படுகொலை செய்யப்பட்ட தேதி. சம்பவம் நடந்தது கி.பி. 680ஆம் ஆண்டில்.
3. நிர்யாணம் = முக்தி - மறைவு - புறப்படுதல் - கடைசிப் பயணம்.
4. 'ஸீமோல்லங்கனம்ஃ என்கிற ஸம்ஸ்கிருதச் சொல்லுக்கு எல்லையைக் கடத்தல் என்பது பொருள். இச் சொல் மராட்டியில் சிலங்கண் என்று திரிந்தது போலும். அரசர்கள் விஜயதசமியன்று கோலாகலமான ஊர்வலமாக எல்லையைக் கடந்துசென்று, எதிரிகளை வெல்லும் அறிகுறியாகச் சில அம்புகளை எய்துவிட்டுத் திரும்புவது ராஜதர்மம். சன்னியாசிகளும் விஜயதசமியன்று சாதுர்மாஸ்ய (மழைக்கால) விரதத்தை முடித்ததற்கு அறிகுறியாக, ஸ்ரீமத் பகவத் கீதையைப் பாராயணம் செய்துகொண்டே நடந்து சென்று அவர்கள் தங்கியிருந்த ஊரின் எல்லையைத் தாண்டிய பிறகு, திரும்பி வரவேண்டும் என்பது தர்ம சாஸ்திர விதி.
 திடீரென்று பளபளவென்று மின்னலடித்துக் கடகடவென்று இடியிடிக்கும் கரிய மேகங்களைப் போன்று பரசுராம சொரூபமாக பாபா தோன்றினார்.
தலையைச் சுற்றிக் கட்டியிருந்த துணியை அவிழ்த்தார். சரக்கென்று கப்னியைக் கழற்றினார். லங்கோட்டை அவிழ்த்தார். மூன்றையும் துனியின் தீயில் போட்டுவிட்டார்.
 ஏற்கெனவே துனி கொழுந்துவிட்டு எரிந்துகொண் டிருந்தது. துனிக்கு மேலும் ஆஹுதியாக (படையலாக) இந்த எரிபொருள்களும் அளிக்கப்பட்டன. இதன் காரணமாக ஜுவாலை ஆவேசத்துடன் உயரமாக எழுந்தது. தீயைக் கண்டு பக்தர்கள் மனம் கலங்கினர்.
ஈதனைத்தும் கணப்பொழுதில் நடந்ததால், பாபாவின் கோபத்திற்குக் காரணம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை. சிலங்கண் சமயத்தில் அவருடைய தோற்றம் பெரும்பீதியை விளைவித்தது.
அக்கினியோ பிரகாசமான ஒளியுடன் பரவியது. பாபாவின் முகமோ அதைவிடப் பிரகாசமாக ஜொ­த்தது. கண்ணைப் பறிக்கும் பிரகாசத்தைத் தாங்கமுடியாததால் அங்கிருந்தவர்களின் கண்கள் தாமாகவே மூடிக்கொண்டன; முகத்தை வேறுதிசையில் திருப்பிக்கொண்டனர்.
ஞானியின் கைகளால் அளிக்கப்பட்ட உணவைப் புசித்து அக்கினி நாராயணன் சந்தோஷமடைந்தார். பரசுராம சொரூபம் எடுத்த பாபாவோ, திகம்பரமாகக் (திசைகளையே ஆடையாக அணிந்து - அம்மணமாகக்) காட்சியளித்தார். அந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் பாக்கியசா­கள்õ
கோபத்தால் அவருடைய கண்கள் சிவந்தன. கடுஞ்சினத்துடன் வெறித்துப் பார்த்துக்கொண்டு உரக்கக் கத்தினார், ''ஓய்! இப்பொழுது நீங்களே முடிவுகட்டுங்கள்; நான் முஸ்லீமா ஹிந்துவா என்று, 'இன்று பாருங்கள்
நான் ஹிந்துவா யவனனா (முஸ்லீமா) என்று. உங்கள் மனம் திருப்தியடையும்வரை பார்த்து நிர்த்தாரணம் செய்துகொள்ளுங்கள். சந்தேகத்தை விட்டொழியுங்கள்’  என்று பாபா கர்ஜித்தார்.
அந்தக் காட்சியைப் பார்த்த மக்கள் பயத்தால் நடுங்கினர், பாபாவை எப்படி சாந்தப்படுத்துவது என்று தெரியாது விழித்தனர், கவலையுற்றனர்.
பாகோஜீ சிந்தே ஒரு குஷ்டரோகி; ஆயினும் பக்தர்களில் சிரேஷ்டர் (சிறந்தவர்). பாகோஜீ தைரியமேற்று பாபாவின் அருகில் சென்று அவருடைய இடுப்பில் ஒரு லங்கோட்டைச் சுற்றினார்.

சாயி சத்சரிதத்திலிருந்து

சாயியின் கிருபை!

    உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால் , ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு , முத...