Sunday, May 22, 2016

எழுத்து அறிவிப்போன் இறைவன் ஆவான்

நெய்வேலியில் ஜவகர் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். இந்தியா முழுவதிலும் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகளில் எங்கள் பள்ளி பத்தாவது இடத்தைப் பிடித்த பள்ளி என்பதில் பெருமைகொள்கிறேன்.
நடப்புக் கல்வியாண்டுடன் ஐந்தாண்டுகளாக இந்தப் பள்ளியில் பணியாற்றுகிறேன். என்னை பிறர் எவ்வாறு மதிக்கவேண்டும் என விரும்புவேனோ அதுபோல மன சாட்சியுடன் மாணவர் மீது அக்கறை கொண்டு அவர்களை உயர்த்தும் வேலையில் ஈடுபட்டுள்ளேன்.
கிண்டல் கேலி செய்த மாணவர்களையும் நேசித்து அவர்களை சிறந்த மாணவர்களாக ஊக்குவிக்கிறேன். பள்ளி மற்றும் வீடுகளில் மரம் வளர்க்க, நம்மாழ்வார் போல இயற்கை உணவுகளை உண்ண வலியுறுத்திவருகிறேன். பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களைத் தவிர்க்கவும், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக சில்வர் பாட்டில்களைப்பயன்படுத்தவும் மாணவர்களிடம் கூறுகிறேன்.
நடைமுறையில் எவ்வாறு வாழவேண்டும் என தினமும் மாணவர்களுக்கு ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி நல்ல பழக்க வழக்கங்களைக் கற்பிக்கிறேன். சமத்துவம் சகோதரத்துவம்ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சாயி பாபாவின் வாழ்க்கை முறை பற்றியும் அவரை வழிபடும் முறை பற்றியும் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறுவதோடு, அவருடைய போட்டோக்களையும் கொடுத்துவருகிறேன்.
கற்பித்தலில் கையாண்ட யுக்தி
மாணவர்களிடம் சிரித்துப் பேசி அவர்கள் மனதில் இடம் பிடித்த நான், எளிய முறையில், சுருக்கமாக பாடக் கருத்துக்களை திரும்பத்திரும்பக் கூறி மனதில் பதியவைத்து விடுவேன். சில நேரங்களில் கோபத்தில் மாணவர்களை கடிந்துகொண்டாலும் அவர்களிடம் மன்னிப்புக்கோருவேன். இதனால் என் மீது மாணவர்கள் அன்பும் அக்கறையும் கொண்டு நான் கூறும் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்.
மறக்கமுடியாத நிகழ்வுகள்
எவ்வளவு பெரிய மேதைகளையும் உருவாக்கித்தரும் பொறுப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு உண்டு என்பதால், மாணவர்களின் அன்றாட முன்னேற்றத் தில் அக்கறை கொண்டு பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு அதிக நேரம் செலவிடுவேன். ஒவ்வொரு மாணவனைப் பற்றியும் அக்கறை யுடன் அவர்களது பெற்றோர்களிடம் தெரியபடுத்துதல், அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் ஆகியவற்றைச் செய்வேன். மாலை ஐந்து மணிக்கு மேலும் கூட்டமாக இருந்து எனது ஆலோசனைகளைக் கேட்டுச் செல்வார்கள். இத்தகைய நிகழ்வுகளால் பள்ளியிலுள்ள அனைவரது மனதிலும் இடம் பிடித்தேன்.
வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வுகள்:
பாபாவை கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் வணங்கிவருகிறேன். ஒரு வருடமாகத் தவறாமல் விரதமிருக்கிறேன். என்னுடைய அண்ணன் பாபா அருளால் மதுப்பழக்கத்திலிருந்து மீண்டார். கடவுள் நம்பிக்கையில்லாமல் இருந்த அவர் இப்போது பாபாவை வணங்குகிறார். எங்கள் குடும்பத்தை பாபாதான் பார்த்துக்கொள்கிறார்.
நெய்வேலியில் வெளியாகும் சாயி சரணம் என்ற புத்தகத்தில் ஓம் சாயி ராம் என்ற மூல மந்திரத்தை எழுதிய பிறகு கோயில் நிர்வாகத்திடம் அதை எழுதியவர்களிடமிருந்து வாங்கித்தருவேன். அவர்களின் கோரிக்கை மற்றும் கஷ்டங்கள் மறைய பிரார்த்தனைக்கு உதவுவேன்.
சாயி பாபா படத்தை ஐந்துக்கு மூன்று என்ற அளவில் பிரிண்ட் செய்து கொடுத்து வருகிறேன். ஸ்ரீ புற்று மாரியம்மன் ஆலயத்தில் சாயி பாபா படம் பிரதிஷ்டை செய்தேன்.  சாயி சரணம் ஆசிரியர் சாயி ராஜேந்திரன் அவர்களை ஆறு மாதமாகத்தான் தெரியும். அதுவும் நேரில் பார்த்தது கிடையாது.
மிகக் குறுகிய காலத்தில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சாயி பக்தக் குடும்பமாக மாறியது. எனது சாயி பக்தியை அறிந்த சாயி ராஜேந்திரன் என்னை தங்களுடைய டிரஸ்டில் ஓர் உறுப்பினராகச் சேர்த்திருக்கிறார். மகனைப்போல நடத்துகிறார். அவருடன் இணைந்து சாயி சேவை செய்வது நிறைவாக உள்ளது.

பசுமை கார்த்திகேயன்
நெய்வேலி

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...